News December 6, 2024
பாலிவுட்டுக்கு செல்லும் ஃபகத் பாசில்

தமிழ், தெலுங்கு படங்களில் தடம் பதித்த நடிகர் ஃபகத் பாசில் அடுத்து பாலிவுட் உலகில் காலடி எடுத்து வைக்கவுள்ளார். அவர் நடிக்க உள்ள ஹிந்தி படத்தை, ‘ஜப் வி மெட்’, ‘ராக்ஸ்டார்’, ‘ஹைவே’ உள்ளிட்ட படங்களை இயக்கி பிரபலமான இயக்குநர் இம்தியாஸ் அலி இயக்க உள்ளார். இந்தப் படத்தில் அனிமல் படத்தின் மூலம் பிரபலமான நடிகை திரிப்தி டிம்ரி அவருக்கு கதாநாயகியாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
Similar News
News December 24, 2025
இளைஞர்களின் ஆற்றலில் இஸ்ரோவின் எழுச்சி: PM

இந்திய இளைஞர்களின் ஆற்றலால், நமது விண்வெளி திட்டங்கள் மிக வலிமையாக மாறியுள்ளதாக PM மோடி தெரிவித்துள்ளார். <<18656125>>புளூபேர்ட்<<>> செயற்கைக்கோளை ஏவிய LVM3 ராக்கெட்டின் நம்பகமான செயல்பாடுகள், ககன்யான் போன்ற எதிர்கால திட்டங்களுக்கு வலுவான அடித்தளத்தை அமைப்பதாக அவர் குறிப்பிட்டார். வணிக ரீதியிலான விண்வெளி சேவைகளை விரிவுபடுத்தவும், சர்வதேச கூட்டணிகளை வலுப்படுத்தவும் இது உதவுவதாக அவர் கூறியுள்ளார்.
News December 24, 2025
வெள்ளி விலை இன்று ஒரே நாளில் ₹10,000 உயர்ந்தது!

இது என்னடா..! வெள்ளிக்கு வந்த வாழ்வு என வாயைப் பிளக்கும் வகையில் வெள்ளி விலை ஜெட் வேகத்தில் அதிகரித்து வருகிறது. நேற்று கிலோவுக்கு ₹3,000 அதிகரித்த நிலையில், இன்று ஒரே நாளில் ₹10,000 அதிகரித்து ₹2,44,000-ஐ தொட்டுள்ளது. சில்லறை விலையில் 1 கிராம் ₹244-க்கு விற்பனையாவதால் வெள்ளியில் முதலீடு செய்தவர்கள் உச்சபட்ச மகிழ்ச்சியில் உள்ளனர். வரும் நாள்களில் வெள்ளியின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
News December 24, 2025
MGR நினைவிடத்தில் EPS எடுத்த சபதம்

MGR-ன் 38-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, அவரது நினைவிடத்தில் EPS தலைமையில் அதிமுகவினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, அதிமுக ஆட்சி மீண்டும் மலர உழைப்போம் என அனைவரும் சபதம் எடுத்துக்கொண்டனர். ஒரு இயக்கத்தை மட்டுமல்ல, ஒரு தலைமுறையின் கனவுகளை உருவாக்கி சென்றவர் MGR என புகழ்ந்த EPS, தமிழக மக்களின் வளர்ச்சிக்காக பாடுபட்ட MGR-ன் வழியை பின்பற்றுவோம் என்று உறுதியேற்றார்.


