News December 6, 2024

ரஜினியின் பிறந்த நாளில் ‘தளபதி’ ரீ-ரிலீஸ்

image

நடிகர் ரஜினிகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு டிச. 12ஆம் தேதி ‘தளபதி’ படம் தியேட்டர்களில் ரீ-ரிலீஸ் செய்யப்படவுள்ளது. மணிரத்னம் இயக்கத்தில், இளையராஜா இசையில் வெளியான இப்படம் இன்றளவும் ‘க்ளாசிக்’ என்று கொண்டாடப்படுகிறது. இப்படம் வெளியாகி 33 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதில் இடம்பெற்ற ‘ராக்கம்மா’ பாடல், BBC நடத்திய வாக்கெடுப்பின் படி உலகின் சிறந்த 4வது பாடலாக தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Similar News

News October 23, 2025

ரயில்வேயில் 2,570 பணிகள்: ₹38,400 வரை சம்பளம்

image

ரயில்வேயில் ஜூனியர் இன்ஜினியர் 2,570 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி இன்ஜினியரிங் (அ) டிப்ளமோ முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். உங்கள் வயது 18-ல் இருந்து 33-க்குள் இருந்தால் வரும் அக்.31 – நவ.30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ₹29,300 – ₹38,400 வரை கிடைக்கும். இதுதொடர்பான முழுவிபரங்கள் அறிய <>க்ளிக் <<>>செய்யுங்கள்

News October 23, 2025

நெஞ்சு சளியை வெளியேற்றும் கசாயம் இதோ!

image

நுரையீரலில் தேங்கியுள்ள சளியை கரைத்து வெளியேற்ற இந்த கசாயம் போதும். முதலில் ஒரு டம்ளர் நீரை ஊற்றி அடுப்பில் சுட வைக்க வேண்டும். அதில் கிராம்பு, மிளகு, ப்ளாக் சால்ட், சுக்கு பவுடர், ஓமம், வெல்லத்தை சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும். கொதித்து, பாதியாக சுண்டியதும், அதை இறக்கி வடிகட்டி, வெதுவெதுப்பான நிலையில் குடிக்க வேண்டும். இதனால் நெஞ்சு சளி, மூக்கடைப்பு, இருமலில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

News October 23, 2025

மின்சார கார்களின் விற்பனை அமோகம்

image

கடந்த ஆண்டு செப்டம்பரை ஒப்பிடும்போது நடப்பாண்டு மின்சார கார்களின் மொத்த விற்பனை 6,216-ல் இருந்து 15,329-ஆக அதிகரித்துள்ளன. டாடா மோட்டார்ஸ் கார்களின் விற்பனை 62% அதிகரித்து 6,216 கார்கள் விற்றுள்ளன. அதேபோல் JSW MG MOTORS 3,912, மஹிந்திரா நிறுவனம் 3,243, BYD இந்தியா 547, கியா இந்தியா 506, ஹிண்டாய் மோட்டார் 349, BMW இந்தியா 310, பென்ஸ் இந்தியா 97 கார்களையும் விற்பனை செய்துள்ளன.

error: Content is protected !!