News December 6, 2024
அதானியின் நண்பரா ஸ்டாலின்?: பாஜக கேள்வி

வீடுகளில் ஸ்மார்ட் மீட்டர் பொறுத்தும் திட்டத்தை TNEB, அதானிக்கு வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை சுட்டிக்காட்டி, ஸ்டாலின் தன் நண்பர் அதானிக்கு தமிழக மின் துறையை தாரை வார்த்து விட்டார் என ராகுல்காந்தி கூறுவாரா என பாஜகவின் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், அதானிக்கு ஒப்பந்தம் அளிக்க துடிக்கிற திமுகவுடன் இனி கூட்டணி இல்லை என கம்யூ., வெளியேறுவார்களா எனவும் அவர் வினவியுள்ளார்.
Similar News
News October 15, 2025
கிச்சன் அடைப்பு நீங்க வேண்டுமா?

கிச்சன் சிங்க் அடைத்துக் கொண்டால் இதை ட்ரை பண்ணி பாருங்கள். *காலி 1/2 லிட்டர் பிளாஸ்டிக் பாட்டிலில் பாதியளவு தண்ணீர் எடுத்துக் கொள்ளவும். *1/4 கப் வினிகரை அதில் கலக்கவும். பின் 2 ஸ்பூன் பேக்கிங் சோடாவை சேர்க்கவும். அப்போது நுரை பொங்க ஆரம்பிக்கும். *சிறிது நேரம் இதை மூடி வைத்தால் கேஸ் உண்டாகும். *பின் அதை கிச்சன் சிங்க்கில் வேகமாக ஊற்றினால், நீண்ட நாள் அடைப்பு நொடியில் நீங்கிவிடும். SHARE IT
News October 15, 2025
யூடியூப் சேனலை நடத்த இப்படி பேசலாமா? கம்பீர்

ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியில் ஹர்ஷித் ராணா இடம்பெற்றதற்கு இந்திய அணியின் முன்னாள் <<17917146>>கேப்டன் ஸ்ரீகாந்த் <<>>கடுமையாக விமர்சித்திருந்தார். யூடியூப் சேனலை நடத்துவதற்காக, இளம் வீரரை விமர்சிப்பது நியாயமற்றது என்றும், நேர்மையாக கூற வேண்டும் எனில் இது ஒரு வெட்கக்கேடான விஷயம் எனவும் கூறினார். ஹர்ஷித் ராணாவின் தந்தை ஒன்றும் முன்னாள் தேர்வுக்குழு தலைவரோ அல்லது கிரிக்கெட் வீரரோ அல்ல எனவும் கூறியுள்ளார்.
News October 15, 2025
ராசி பலன்கள் (15.10.2025)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். மேலே இருக்கும் போட்டோஸை SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.