News December 5, 2024
குழந்தைகளுக்காக UK அரசு சூப்பர் முடிவு..!

சிறுவயதிலேயே உடல் பருமன் உள்ளிட்ட பல நோய்களை கொண்டு வரும் JUNK FOOD சார்ந்த விளம்பரங்களை பகல் நேரங்களில் ஒளிபரப்ப UK அரசு தடை விதித்துள்ளது. 2025 அக்டோபரில் இந்த தடை அமலுக்கு வர உள்ளது. குழந்தைகளை குறிவைத்து மார்க்கெட் செய்யப்படும் Pan Cakes, Waffles, Muffins, Pastry உள்பட பலவற்றின் விளம்பரங்களை இரவு 9 மணிக்கு மேல் மட்டுமே ஒளிபரப்ப அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலும் இது கொண்டுவரப்படுமா?
Similar News
News September 11, 2025
ராஜினாமா செய்தார் சி.பி.ராதாகிருஷ்ணன்

துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து சி.பி.ராதாகிருஷ்ணன், மகாராஷ்ரா மாநில கவர்னர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். நாளை (செப்.12) அவர் துணை ஜனாதிபதியாக பதவியேற்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே குஜராத் மாநில கவர்னரான ஆச்சார்யா தேவ்ரத், மகாராஷ்டிரா கவர்னர் பொறுப்பையும் கூடுதலாக கவனிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
News September 11, 2025
கோலிவுட் Weekend விருந்து: நாளைக்கு மட்டும் 10 படம்!

நாளை செப்டம்பர் 12-ம் தேதி மட்டும் 10 தமிழ் படங்கள் ரிலீஸிற்கு தயாராக உள்ளன. ஜிவி பிரகாஷ் நடிப்பில் பிளாக்மெயில், அர்ஜுன் தாஸ் நடிப்பில் பாம், அதர்வா நடிப்பில் தணல் போன்ற படங்களுக்கு நல்ல எதிர்பார்ப்பு உள்ளது. அதே நேரத்தில் குமாரசம்பவம், காயல், யோலோ, மதுரை 16, அந்த 7 நாட்கள், உருட்டு உருட்டு & தாவூத் உள்ளிட்ட சிறு பட்ஜெட் படங்களும் இந்த வாரம் திரையரங்குகளை ஆக்கிரமிக்க ரெடியாகிவிட்டன.
News September 11, 2025
மரியாதை செய்யாத விஜய்.. வெடித்த அடுத்த சர்ச்சை

TVK தலைவர் விஜய், அடுத்த சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். இமானுவேல் சேகரனின் நினைவு தினத்தையொட்டி, உதயநிதி, நயினார், சீமான் உள்ளிட்ட தலைவர்கள் நேரில் மரியாதை செலுத்தினர். ஸ்டாலின், இபிஎஸ் தங்களது X பக்கத்தில் மரியாதை செலுத்தினர். ஆனால், விஜய் ஒரு பதிவு கூட போடவில்லை. இதுகுறித்து திமுகவின் ராஜீவ் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். ஆனால், தவெகவினர் நேரில் அஞ்சலி செலுத்துவார்கள் என கூறப்படுகிறது.