News March 22, 2024
தஞ்சாவூர் அருகே போலீசார் அணிவகுப்பு

அய்யம்பேட்டையில் வருகின்ற 19ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மக்கள் அச்சமின்றி வாக்களிக்க வேண்டும் எனவும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்வு அய்யம்பேட்டை பாபநாசம் காவல்துறை சார்பில் காவல் கண்காணிப்பாளர் அசோக் தலைமையில் காவல்துறையினர் கொடி அணிவகுப்பு நடத்தினர். அய்யம்பேட்டையில் தொடங்கி 5 கிலோமீட்டர் சுற்றளவிற்கு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
Similar News
News September 9, 2025
தஞ்சாவூர்: மாணவர்களுக்கு பயிற்சி வகுப்புகள் ஆட்சியர் தகவல்

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் தஞ்சாவூர் மணி மண்டபம் அருகே உள்ள வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வருகிற 10ஆம் தேதி முதல் பயிற்சி வகுப்புகளும் பயிற்சி தேர்வுகளும் நடைபெற உள்ளது. எனவே போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைமாறு தெரிவித்துள்ளார்.
News September 9, 2025
தஞ்சாவூர்: இரவு ரோந்து போலீசார் விவரம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று (செப்டம்பர் 8) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News September 9, 2025
உங்களுடன் ஸ்டாலின் முகாம்

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் வட்டாரம் நாச்சியார்கோயில் பகுதிகளுக்கு உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் (செப்டம்பர் 10) ஆம் தேதி புதன்கிழமை நாச்சியார்கோயில், அறிஞர் அண்ணா மண்டபத்தில் நடைபெறுகிறது. இந்த முகாமில் பொதுமக்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு தங்களது மனுக்களை கொடுத்து அரசின் நலத்திட்டங்களில் பங்கு கொண்டு பயனடையுமாறு தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் கேட்டுக்கொண்டுள்ளார்.