News December 5, 2024
ஓபிஎஸ்-க்கு பதிலடி கொடுத்த செல்லூர் ராஜூ

ஜெ., ஆட்சியை தமிழகத்தில் மீண்டும் அமைப்போம் என்று சொல்ல தகுதியானவர்கள் நாங்கள்தான் என்று செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். மக்கள் மனநிலை தற்போது தமிழக அரசுக்கு எதிராக மாறியுள்ளது. DMK அரசின் அலங்கோல நிலையை கண்டிக்க அவர்களது கூட்டணி கட்சிகள் யாரும் தயாராக இல்லை. ஜெ., ஆட்சியை அமைக்கும் தகுதி EPSக்கு தான் உள்ளது என்றும் OPSக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
Similar News
News September 11, 2025
ராஜினாமா செய்தார் சி.பி.ராதாகிருஷ்ணன்

துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து சி.பி.ராதாகிருஷ்ணன், மகாராஷ்ரா மாநில கவர்னர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். நாளை (செப்.12) அவர் துணை ஜனாதிபதியாக பதவியேற்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே குஜராத் மாநில கவர்னரான ஆச்சார்யா தேவ்ரத், மகாராஷ்டிரா கவர்னர் பொறுப்பையும் கூடுதலாக கவனிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
News September 11, 2025
கோலிவுட் Weekend விருந்து: நாளைக்கு மட்டும் 10 படம்!

நாளை செப்டம்பர் 12-ம் தேதி மட்டும் 10 தமிழ் படங்கள் ரிலீஸிற்கு தயாராக உள்ளன. ஜிவி பிரகாஷ் நடிப்பில் பிளாக்மெயில், அர்ஜுன் தாஸ் நடிப்பில் பாம், அதர்வா நடிப்பில் தணல் போன்ற படங்களுக்கு நல்ல எதிர்பார்ப்பு உள்ளது. அதே நேரத்தில் குமாரசம்பவம், காயல், யோலோ, மதுரை 16, அந்த 7 நாட்கள், உருட்டு உருட்டு & தாவூத் உள்ளிட்ட சிறு பட்ஜெட் படங்களும் இந்த வாரம் திரையரங்குகளை ஆக்கிரமிக்க ரெடியாகிவிட்டன.
News September 11, 2025
மரியாதை செய்யாத விஜய்.. வெடித்த அடுத்த சர்ச்சை

TVK தலைவர் விஜய், அடுத்த சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். இமானுவேல் சேகரனின் நினைவு தினத்தையொட்டி, உதயநிதி, நயினார், சீமான் உள்ளிட்ட தலைவர்கள் நேரில் மரியாதை செலுத்தினர். ஸ்டாலின், இபிஎஸ் தங்களது X பக்கத்தில் மரியாதை செலுத்தினர். ஆனால், விஜய் ஒரு பதிவு கூட போடவில்லை. இதுகுறித்து திமுகவின் ராஜீவ் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். ஆனால், தவெகவினர் நேரில் அஞ்சலி செலுத்துவார்கள் என கூறப்படுகிறது.