News December 5, 2024

சிகரெட்டை போல தான் ஸ்மார்ட் போன்களும்..!

image

சிகரெட் பாக்ஸ்களில் இடம்பெற்றுள்ளதை போன்று, ஸ்மார்ட் போன்களும் உடல் நலத்திற்கு தீங்கானது என்ற எச்சரிக்கை வாசகத்தை போன்களில் இடம்பெற செய்ய ஸ்பெயின் அரசு முடிவு செய்துள்ளது. போன்களுக்கு அடிமையாவதை ‘பொது சுகாதார தொற்றுநோய்’ என வரையறுத்து, 3 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போனை தடை செய்யவும், அந்நாட்டு அரசு அமைத்த நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது. இந்த ஐரோப்பிய நாட்டை போல், இந்தியா எப்போது விழிக்கும்?

Similar News

News April 29, 2025

ஆணுறை: செய்யக்கூடாத 7 விஷயங்கள்

image

*Expiry date முடிந்த, சேதமான, ஒட்டிக்கொண்ட ஆணுறைகளை பயன்படுத்தக் கூடாது *அலர்ஜி ஏற்பட்டால் தவிர்க்கவும் *வெப்பம் உள்ள இடங்களில் வைக்கக் கூடாது *காண்டம் கவரை பிரிக்க பற்கள், கத்தரிக்கோல், நகங்கள், அல்லது வேறு எந்த கூரான பொருள்களையும் பயன்படுத்தக் கூடாது *எண்ணெய், வாசலின், கிரீம் எதையும் அதன்மீது பயன்படுத்தக் கூடாது *ஒருமுறை மட்டுமே பயன்படுத்த வேண்டும் *டாய்லெட்டில் போட்டு ஃபிளஷ் செய்யக் கூடாது.

News April 29, 2025

ஷாலினியை புகழ்ந்த அஜித்

image

33 வருடங்களாக என் வேலையை நேசித்து செய்கிறேன், என்னுடைய வாழ்க்கையை எளிதாக வாழ விரும்புகிறேன் என்று நடிகர் அஜித் முதல்முறையாக மனம் திறந்து பேசியுள்ளார். என்னுடைய மிகப்பெரிய பலம் எனது குடும்பத்தாரும், எனது மனைவி, குழந்தைகளும் தான். குறிப்பாக எனது மனைவி ஷாலினி என்னுடைய தூணாக உள்ளார். எனக்காக நிறைய விஷயங்களை தியாகம் செய்த அவருக்குதான், என்னுடைய சாதனைகள் எல்லாம் சேரும் எனவும் தெரிவித்துள்ளார்.

News April 29, 2025

மே 1 டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

image

மே 1 தொழிலாளர்கள் தினத்தன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் டாஸ்மாக் கடைகள், பார்கள் மற்றும் ஹோட்டல்களில் மது விற்பனை இருக்காது. அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் இதுகுறித்து சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இதனால் மதுப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

error: Content is protected !!