News December 5, 2024
விழுப்புரத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

ஃபெஞ்சல் புயல் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் அதிகனமழை பெய்தது. வெள்ளப்பெருக்கு மற்றும் மழைக் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளை சீர் செய்யும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதால் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (டிச 06) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும், வரும் திங்கள்கிழமை முதல் பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News January 12, 2026
விழுப்புரம்: மக்களுக்கு ALERT!

விழுப்புரம் மக்களே, பொங்கல் பண்டிக்கைக்கு வெளி ஊர்களில் இருந்து சொந்த ஊருக்கு அரசுப் பேருந்துகள் மூலம் செல்ல உள்ளீர்களா? இந்த எண்களை நோட் பண்ணி வச்சிக்கோங்க!
1. பேருந்தில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் – 1800 599 1500
2. Luggage தொலைந்து போனால் – 044-49076326
3. ஓட்டுநர் / நடத்துநர் குறித்த புகார் – 1800 599 1500
4. இந்த தகவல் மற்றவர்களுக்கு பயன்பெற SHARE பண்ணுங்க!
News January 12, 2026
விழுப்புரத்தில் கொடூரத்தின் உச்சம்!

விழுப்புரம், கண்டமானடியில், மதுபோதையில் வீட்டிற்கு வந்த பாபு, உணவு சமைக்கவில்லை என்ற ஆத்திரத்தில் தனது மகள் வைஷ்ணவியை 17 சுவரில் தலையை மோதி கொடூரமாகத் தாக்கினார். இதில் பலத்த காயமடைந்து 26 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாணவி, நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையிலுள்ள பாபு மீதான வழக்கை, போலீசார் தற்போது கொலை வழக்காக மாற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 12, 2026
திண்டிவனத்தில் இருவர் அதிரடி கைது!

திண்டிவனம் சந்தைமேடு கூட்டுரோட்டில் ரோஷணை போலீசார் நடத்திய வாகன சோதனையில், ஆந்திராவிலிருந்து கடத்தி வரப்பட்ட தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களைப் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 2 லாரிகளைச் சோதனையிட்டதில், மொத்தம் 330 பாக்கெட் புகையிலை பொருட்கள் சிக்கின. இதையடுத்து லாரி ஓட்டுநர்கள் நடராஜன் (48) மற்றும் சிற்றரசன் (49) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்த்தனர்.


