News December 5, 2024
சமந்தாவை ஓவர் டேக் செய்த சோபிதா

IMDBயில் இந்த வருடம் அதிகம் தேடப்பட்ட பிரபலங்களின் பட்டியலில் சோபிதா துலிபாலா 5ஆம் இடத்தை பிடித்துள்ளார். நாக சைதன்யாவுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்ட பின், சோபிதாவின் பின்னணியை தெரிந்து கொள்ள பலர் இவரை பற்றி தேடியதால், இந்த இடத்தை பிடித்துள்ளார். இந்த பட்டியலில் சமந்தா 8ஆவது இடத்தில் உள்ளார். முதலிடத்தில் திரிப்டி டிம்ரி, தீபிகா படுகோனே 2ஆம் இடத்திலும், இஷான் கட்டர் 3ஆம் இடத்திலும் உள்ளனர்.
Similar News
News September 11, 2025
₹5,000 வரை உயர்ந்தது.. மக்கள் அதிர்ச்சி

வீட்டு வாடகை உயர்வு சென்னைவாசிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ₹10,000 – ₹15,000 வரை இருந்த 2BHK வீடுகள், இப்போது ₹20,000 – ₹25,000 வரை உயர்ந்துள்ளது. போரூர், கிண்டி, நந்தனம், அண்ணாநகரில் 2BHK வீடுகளின் வாடகை சுமார் ₹16,000 – ₹22,000 வரை உயர்ந்துள்ளது. சில பகுதிகளில் இந்த வாடகை உயர்வு இன்னும் அதிகமாக உள்ளது. இதனால், நடுத்தர வர்க்கத்தினர் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். உங்க ஊரில் வாடகை எவ்வளவு?
News September 11, 2025
₹24,307 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள்: CM ஸ்டாலின்

திமுக ஆட்சி அமைந்தபிறகு 77% முதலீடு ஒப்பந்தங்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளதாக CM ஸ்டாலின் கூறியுள்ளார். ஓசூரில் நடைபெறும் தொழில் முதலீட்டு மாநாட்டில் பேசிய அவர், அக்.9, 10-ல் கோவையில் புத்தொழில் மாநாடு நடத்தப்படும் என அறிவித்தார். ஓசூர் மாநாட்டில் ₹24,307 கோடி மதிப்பிலான 92 நிறுவனங்கள் கையெழுத்தாகியுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், நம்முடைய முதலீட்டு இலக்கை நாமே முறியடிப்போம் என்றும் சூளுரைத்தார்.
News September 11, 2025
ராமதாஸ் அறிவிப்பு பாமகவை கட்டுப்படுத்தாது: கே.பாலு

அன்புமணியை நீக்கும் அதிகாரம் ராமதாசுக்கு இல்லை என கே.பாலு தெரிவித்துள்ளார். பாமக தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் மட்டுமே நிர்வாக பணிகளை மேற்கொள்ள முடியும் என கூறிய அவர், ராமதாஸ் அறிவிப்பு பாமகவை கட்டுப்படுத்தாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும், அன்புமணிதான் பாமக தலைவர் என தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும், அவருக்குதான் அதிகாரம் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.