News December 5, 2024
இந்திய அரசு நடத்தும் யுவ உத்சவ் 2024-2025

இந்திய அரசு, நேரு யுவகேந்திர நாமக்கல் மாவட்டம் மற்றும் JKKN கல்லூரி இணைந்து நடத்தும் மாவட்ட அளவிலான யுவ utsav 2024-2025 ஏழு வகையான விளையாட்டுகளைக் கொண்டு குமாரபாளையத்தில் உள்ள ஜே கே கே என் கல்லூரியில் நாளை நடைபெற உள்ளது. இதில் பங்கு பெற விரும்புபவர்கள் https://forms.gle/mF8FUxewKcYCrZz66 இணையதளம் மூலம் பதிவு செய்யலாம். தகுதி 15 வயதுக்கு மேல் 29 வயதுக்குள் கலந்து கொள்ள முடியும்.
Similar News
News September 10, 2025
நாமக்கல்: +2 முடித்தால் அரசு வங்கி வேலை!

நாமக்கல் மக்களே., அரசு வங்கியான பேங்க் ஆஃப் பரோடாவின் துணை நிறுவனமான ’BOP Capital Markets’நிறுவனத்தில் காலியாக உள்ள ’பிஸ்னஸ் டெவலப்மெண்ட் மேனேஜர்’ பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு 12ஆவது படித்திருந்தாலே போதுமானது. மாதம் ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு செப்.30ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க <
News September 10, 2025
நாமக்கல்: 5 வயது சிறுமியை கடித்த தெருநாய்!

நாமக்கல்: ராசிபுரம், இந்திராகாலனி பகுதியைச் சேர்ந்த தம்பதி சீனிவாசன், வைத்தீஸ்வரி. இவர்களுடைய மகள் தியா(5) நேற்று முன்தினம் வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த தெருநாய் தியாவை கடித்துக் குதறியதில், சிறுமியின் இடது பக்க காது துண்டானது. உடனே அக்கம் பக்கத்தினர் அந்தத் தெருநாயை விரட்டினர். இதனால், படுகாயமடைந்த சிறுமி தற்போது தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
News September 10, 2025
நாமக்கல்லில் மின் தடை அறிவிப்பு!

நாமக்கல்: வில்லிபாளையம், கெட்டிமேடு துணை மின் நிலையலங்களில் பராமரிப்புப் பணிகள் காரணமாக நாளை(செப்.11) வில்லிபாளையம், ஜங்கம்மநாய்க்கன்பட்டி, சின்னமநாயக்கன்பட்டி, சுங்கக்கன்பட்டி, நல்லாகவுண்டம்பாளையம், பில்லூர், கூடச்சேரி, கீழக்கடை, கோணங்கிப்பட்டி, கெட்டிமேடு, பொன்னேரி, காளிசெட்டிப்பட்டி, பாலப்பட்டி, பெருமாப்பட்டி, பொம்மசமுத்திரம் ஆகிய பகுதிகளில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.