News December 5, 2024
கழிவு நீர் கலக்கவில்லை: அமைச்சர் மறுப்பு

சென்னை தாம்பரத்தில் குடிநீரில் கழிவுநீர் கலக்கவில்லை என அமைச்சர் தா.மோ.அன்பரசன் விளக்கம் அளித்துள்ளார். கழிவுநீர் கலந்திருந்தால் நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டிருப்பர் எனவும், உணவுப் பொருளில் கலப்படம் நிகழ்ந்ததாலேயே உயிரிழப்பு ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். கழிவுநீர் கலந்த குடிநீரை அருந்தியதால் உயிரிழப்பு ஏற்பட்டதாகவும், மெத்தனப் போக்குடன் அரசு செயல்பட்டதாகவும் EPS குற்றஞ்சாட்டியிருந்தார்.
Similar News
News November 5, 2025
இந்தியாவுக்கு உதவ முன்வந்த சீனா!

டெல்லியில் காற்று மாசுபாடு நாளுக்கு நாள் மிக மோசமாகி வருகிறது. இன்றைய நிலவரப்படி, காற்று தர குறியீடு (AQI) 293-ஆக உள்ளது. இந்நிலையில், காற்று மாசுபாட்டை குறைப்பதற்கு உதவ தயாராக உள்ளதாக இந்தியாவில் உள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது. இதேபோன்றதொரு சூழலை தாங்களும் சந்தித்ததாகவும், அதில் இருந்து மீண்ட அனுபவங்களை பகிர தயாராக இருப்பதாக கூறி, அது தொடர்பான சில புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளது.
News November 5, 2025
BREAKING: கூண்டோடு அதிரடி கைது

சென்னையில் வீடு ஒன்றில் போதை மாத்திரை விற்பனை செய்த பெண் உள்பட 7 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். புழல் பகுதியில் போதை மாத்திரையை கரைத்து ஊசி மூலமாக செலுத்தி கொண்ட கல்லூரி மாணவன் உடல்நலம் பாதிக்கப்பட்டு ஸ்டான்லி ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், போலீசார் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர். 7 பேர் கொண்ட கும்பலிடம் 300 மாத்திரைகளும் சிக்கியுள்ளன.
News November 5, 2025
9-ம் தேதி கடைசி: அரசு மெடிக்கல் கல்லூரி அட்மிஷன்

2025-2026 கல்வியாண்டிற்கான M.D. (Yoga & Naturopathy) PG-க்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியாகியுள்ளது. விண்ணப்பிக்க விரும்புவர்கள் யோகா மற்றும் இயற்கை மருத்துவத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பக்கட்டணம் ₹3,000. SC/ ST பிரிவினர் விண்ணப்பக்கட்டணம் செலுத்த தேவையில்லை. வரும் 9-ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். நாளை முதல் <


