News December 5, 2024
SHOCK: இணையத்தில் Leak ஆன புஷ்பா 2

பான் இந்தியா அளவில், தியேட்டர்களில் மிக கிராண்டாக புஷ்பா 2 படம் இன்று வெளியாகியுள்ளது. படம் ரிலீசாகி ஒருநாள் கூட ஆகாத நிலையில், ஆன்லைன் பைரசி தளங்களில் புஷ்பா 2 சட்டவிரோதமாக வெளியாகியுள்ளது ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. சுமார் ரூ.500 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் தயாரான புஷ்பா 2 படத்தின் ஆரம்பகட்ட விமர்சனங்கள் மிகவும் பாசிடிவாக உள்ளதாகக் கூறப்படுகிறது.
Similar News
News October 26, 2025
BREAKING: வேகமாக வருகிறது புயல்

வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது வடமேற்கு நோக்கி நகர்ந்து, அடுத்த 24 மணி நேரத்தில் Montha புயலாக மாறும் என்று IMD கணித்துள்ளது. தற்போது சென்னைக்கு தென்கிழக்கில் 790 கிமீ தொலைவில் புயல் சின்னம் இருக்கிறது. மேலும், 7 கி.மீ வேகத்தில் நகர்ந்து வந்த புயல் சின்னம், திடீர் திருப்பமாக 8 கி.மீ வேகத்தில் வடமேற்கில் நகர தொடங்கியுள்ளது.
News October 26, 2025
பழைய நண்பனை (BJP) விடமாட்டோம்: செம்மலை

தவெக தலைவர் விஜய், அதிமுக கூட்டணிக்குள் வந்தால், பாஜகவை இபிஎஸ் கழட்டிவிட்டு விடுவார் என்று அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர். இந்நிலையில், புதிய நண்பனுக்காக (TVK), பழைய நண்பனை (BJP) கைவிடும் பழக்கம் அதிமுகவுக்கு இல்லை என செம்மலை தெரிவித்துள்ளார். மேலும், பேரவை தேர்தலில் அதிமுக வலுவான கூட்டணி அமைக்கும் எனக் கூறிய அவர், திமுகவுக்கு எதிரான கட்சிகள் கூட்டணிக்கு வர அழைப்பும் விடுத்துள்ளார்.
News October 26, 2025
RBI அதிரடி அறிவிப்பு.. நீங்களும் ₹40 லட்சம் வெல்லலாம்!

‘பாதுகாப்பான வங்கி- அடையாளம், நேர்மை, சமவாய்ப்பு’ என்ற கருப்பொருளில் கீழ் RBI ‘HaRBInger 2025’ ஹேக்கத்தான் போட்டியை அறிவித்துள்ளது. Tokenised KYC, Offline CBDC (Digital Currency), enhancing trust போன்றவற்றில் உள்ள சிக்கல்களுக்கு தொழில்நுட்ப ரீதியில் தீர்வுகளை கண்டுபிடிக்க வேண்டும். வெற்றி பெறுபவருக்கு முதல் பரிசாக ₹40 லட்சமும், 2-வது பரிசாக ₹20 லட்சமும் வழங்கப்படும். யாரு இந்த போட்டிக்கு ரெடி?


