News December 5, 2024
மோதுவோம் வா.. திருச்சி SPக்கு சீமான் அழைப்பு

திருச்சி SP வருண்குமார், நாதகவை பிரிவினைவாத இயக்கம் என அண்மையில் பேசியிருந்தார். ஏற்கெனவே சீமானுக்கும், அவருக்கும் கருத்து வேறுபாடு நிலவி பிறகு தணிந்திருந்தது. இந்த நிலையில், இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பேசிய சீமான், வருண்குமாருடன் தாம் மோத தயாராக இருப்பதாகக் கூறினார். மேலும், நேருக்கு நேர் மோதுவோம் வா என்றும் வருண்குமாருக்கு சீமான் அழைப்பு விடுத்தார்.
Similar News
News September 11, 2025
கழுத்து வலி நீங்க இந்த யோகாசனம் பண்ணுங்க!

கழுத்து, முதுகு வலி நீங்க சலபாசனம் செய்து பழகுங்கள்.
*மார்பு தரையில் படும்படி, கை- கால்களை நீட்டி படுக்கவும்.
*இரு பாதங்களும் ஒன்றுடன் ஒன்று இணைந்திருக்க வேண்டும்.
*இரு கைகளையும் பின்னோக்கி நீட்டி, மார்பை மேலே உயர்த்தவும்.
*உள்ளங்கைகளை முதுகின் மேல் கொண்டு வந்து பிடித்து, நேராக பார்க்கவும். *இந்தநிலையில் 15- 20 விநாடிகள் வரை இருந்துவிட்டு மீண்டும் பழைய நிலைக்கு திரும்பவும். SHARE IT.
News September 11, 2025
ஒடுக்கப்பட்ட மக்கள் மீது திமுகவுக்கு அக்கறை: திருமா

அரசமைப்பை பாதுகாக்கவே CM ஸ்டாலினுடன் கைகோர்த்து உள்ளதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார். திமுகவுக்கு, விசிக அடிபணிந்து விட்டதாக பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றன. இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பேசிய திருமா, ஒடுக்கப்பட்ட மக்கள் மீது திமுக அக்கறை கொண்டுள்ளது என பாராட்டினார். மேலும், தமிழகத்தில் அம்பேத்கரின் பெயரை ஆங்காங்கே நிறுவியதில் திமுகவுக்கு பங்கு உண்டு என்றார்.
News September 11, 2025
வியாழக்கிழமைகளில் குரு பகவானின் முழு அருள் பெற…

ஓம் விருஷபத் வஜாய வித்மஹே
க்ருணி ஹஸ்தாய தீமஹி தந்நோ குருஹ் ப்ரசோதயாத்
பொருள்:
இடப்பக்கத்தில் கொடியை வைத்திருக்கும் குரு பகவானே, எப்போதும் உங்கள் அருட்கரங்களால் அருள்மழை பொழியும் ப்ரகஸ்பதியே, என் வாழ்வில் உள்ள தீமைகளை அகற்றி நன்மைகளை அளித்திட வேண்டுகிறேன். Share it.