News December 5, 2024

முதல்வர் மருந்தகம்: விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்

image

B.Pharm, D.Pharm சான்று பெற்றவர்கள், தமிழ்நாடு முழுவதும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் முதல்வர் மருந்தகம் அமைக்க www.mudhalvarmarundhagam.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க இன்றே (டிச.5) கடைசி நாள் என்பதால், விருப்பமுள்ள தொழில்முனைவோர் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மானியமாக ரூ.3 லட்சம் 2 தவணைகளாக ரொக்கமாகவும், மருந்துகளாகவும் வழங்கப்படும்.

Similar News

News November 5, 2025

சிவகங்கையில் இன்று இங்கெல்லாம் மின்தடை.!

image

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று (நவ.5) புதன்கிழமை மாதந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் மானாமதுரை சிப்காட், ராஜ கம்பீரம், முத்தனேந்தல், தே.புதுக்கோட்டை, முனைவென்றி, அண்ணாவாசல், கீழப்பசலை ஆகிய பகுதிகளில் காலை 9:00 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என மின் செயற்பொறியாளர் அறிவித்துள்ளார்.

News November 5, 2025

சிவகங்கைக்கு புதிய முதன்மை கல்வி அலுவலர் நியமனம்

image

சிவகங்கை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பணியிடம் கடந்த ஆறு மாதமாக காலியாக இருந்ததால், தற்போது கன்னியாகுமரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக உள்ள க.பாலதண்டாயுதபாணி என்பவரை சிவகங்கை மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக இன்று நியமிக்கப்பட்டிருப்பதாக, பள்ளிக் கல்வி இயக்குனர் அலுவலக செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 4, 2025

கண்மாய் குத்தகை எடுக்க விண்ணப்பிக்கலாம்

image

அமராவதி புதூர், செஞ்சை நாட்டார், சங்கராபுரம் மற்றும் பாதரக்குடி ஆகிய கண்மாய்களின் மீன்பிடி உரிமையினை 3 ஆண்டு காலத்திற்கு குத்தகைக்கு விட மின்னணு ஒப்பந்தப்புள்ளிகள் வரவேற்கப்படுகின்றன. மேலும் விவரங்களுக்கு 04575-240848 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது adfsivaganga@gmail.com என்கிற மின்னஞ்சல் முகவரியின் வாயிலாகவோ தொடர்பு கள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் பொற்கொடி தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!