News December 5, 2024

மதுரை மாநகராட்சிக்கு புதிய துணை கமிஷனர் நியமனம்

image

மதுரை மாநகராட்சி துணை கமிஷனர்கள் தயாநிதி ஓய்வு பெற்றார், சரவணன் செங்கல்பட்டு நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனராக பணியிடமாற்றம் செய்யப்பட்டார். மதுரை மாநகராட்சிக்கு துணை கமிஷனர்கள் நியமிக்கப்படாமல் இருந்ததால் மாநகராட்சி கமிஷனருக்கு பணிச்சுமை அதிகரித்தது. இந்நிலையில் கோவை மாநகராட்சியில் இருந்த கே. சிவக்குமார் மதுரை மாநகராட்சி துணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஓரிருநாளில் பொறுப்பேற்க உள்ளார்.

Similar News

News October 18, 2025

மதுரை: தெரு நாய்களைக் கொன்றவர்களை தேடும் போலீசார்

image

மது­ரை­ விலங்­குகள் நல பிரதிநிதி முருகேஸ்­வரி எஸ்.எஸ். காலனி போலீசில் இன்று கொடுத்துள்ள புகாரில் கூறியுள்ளதாவது : எஸ்.எஸ். காலனியில், தெரு நாய்­களை மர்ம நபர்­கள் விஷம் வைத்து கொலை செய்­துள்ளனர். அந்த நாய்­களுக்கு பிரே­த­ ப­ரி­சோ­தனை செய்து, அவை­களை கொன்ற கொலை­யாளி­கள் மீது உரிய எடுக்­க­ வேண்டும் என தெரிவித்துள்­ளார். எஸ்.எஸ்
காலனி போலீ­சார் விசாரிக்கின்­ற­னர்.

News October 18, 2025

மதுரை அருகே லாரி மோதி கொடூர விபத்து

image

மதுரை கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் கள்ளிக்குடி அருகே மதுரையிலிருந்து விருதுநகர் நோக்கி பழங்களை ஏற்றி சென்ற வேன் முன்னே சென்ற லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் சிக்கியுள்ளவர்களை காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் மீட்டனர். ஓட்டுனர் காயங்களுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அனுமதிக்கப்பட்டுள்ளார். பின்னர் போக்குவரத்து சரி செய்யப்பட்டது.

News October 18, 2025

மதுரை: Driving Licence-க்கு வந்த முக்கிய Update!

image

மதுரை மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் இந்த <>லிங்கில் <<>>சென்று மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைசன்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!