News March 22, 2024

அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் அறிக்கை வெளியீடு

image

தி.மு.க. தலைமையிலான இந்தியா கூட்டணி கட்சிகளின் ஒருங்கிணைந்த கடலூர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வருகின்ற 24.03.2024 மாலை 3 மணியளவில் வடலூர், மங்கையர்கரசி திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் இந்தியா கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொள்ளுமாறு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Similar News

News April 11, 2025

கடலூர்: 10 வட்டாட்சியர் அலுவலகங்களில் நாளை சிறப்பு முகாம்- ஆட்சியர்

image

கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், பண்ருட்டி, திட்டக்குடி, ஸ்ரீமுஷ்ணம், காட்டுமன்னார்கோயில், குறிஞ்சிப்பாடி, வேப்பூர், புவனகிரி ஆகிய 10 இடங்களில் வட்டாட்சியர் அலுவலகங்கள் செயல்படுகிறது. இந்த அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் நாளை (12/4/2025) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை பொது விநியோகத் திட்ட குறைதீர்வு முகாம் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.

News April 11, 2025

குழந்தை பாக்கியம் அருளும் மேல்பட்டாம்பாக்கம் சுப்பிரமணியர்

image

மேல்பட்டாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. உற்சவத்தின் 9 நாட்களும் தினமும் மகா அபிஷேகம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் காட்சி தருகிறார். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் முருகனுக்கு தேன் அபிஷேகம் செய்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

News April 11, 2025

கடலூர் மாவட்டத்திற்கு மழை எச்சரிக்கை

image

வங்கக்கடல் காற்றழுத்த தாழ்வு காரணமாக தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கடலூர் மாவட்டத்தில் இன்று (ஏப்.11) பல்வேறு பகுதியில் தொடர் மழை பெய்ய வாய்ப்புள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே கடலூர் மக்களே வெளியே செல்லும் போது குடையுடன் செல்லுங்க. இந்த தகவலை உங்க உறவினர்களுக்கும் SHARE பண்ணுங்க…

error: Content is protected !!