News December 5, 2024
பிங்க் பால் டெஸ்டில் சாதிக்குமா இந்திய அணி!

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் இரண்டாவது BGT டெஸ்ட் போட்டி அடிலெய்டு மைதானத்தில் நாளை துவங்க உள்ளது. நாளை காலை 9.30 தொடங்கும் இப்போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி, ஹாட் ஸ்டாரில் ஓடிடியில் காணலாம். இதுவரை இந்தியா- ஆஸி ஒருமுறை பிங்க் பால் டெஸ்டில் மோதியுள்ளன. அதில் ஆஸி.யே வெற்றி பெற்றுள்ளது. கடந்தமுறை அடைந்த தோல்விக்கு இந்திய அணி பதிலடி தருமா?. கீழே கமெண்ட் பதிவிடுங்கள்.
Similar News
News December 26, 2025
பெரம்பலூர்: வாக்காளர் பட்டியல் முகாம் அறிவிப்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் SIR கணக்கெடுப்பு பணிக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்டதில், பெரம்பலூர் (தனி) சட்டமன்ற தொகுதியில் 387 வாக்குசாவடி மையமும், குன்னம் சட்டமன்ற தொகுதியில் 345 வாக்குசாவடி மையமும் உள்ளது. இதில் முதற்கட்டமாக டிசம்பர் 27,28 ஆகிய தினங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
News December 26, 2025
BREAKING: ரூபாய் மதிப்பு சரிவு.. மிகப்பெரிய தாக்கம்

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, ₹15 பைசா குறைந்து, ₹89.86 என வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த சில நாட்களாக ஏறுமுகத்தில் இருந்த ரூபாயின் மதிப்பு மீண்டும் சரிந்துள்ளது. இந்த சரிவு, இந்திய பொருளாதாரம் & சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய பொருள்களின் விலை உயர வாய்ப்புள்ளது.
News December 26, 2025
விஜய்க்கு விஜய் வசந்த் பதிலடி!

யார் தீய சக்தி, தூய சக்தி என்பது 2026 தேர்தலில் தெரியும் என காங்கிரஸ் MP விஜய் வசந்த் தெரிவித்துள்ளார். தஞ்சாவூரில் செய்தியாளர்களை சந்தித்த விஜய் வசந்த், களத்திற்கு வரும் புதிய கட்சி ஆளுங்கட்சியை எதிர்த்து தான் அரசியல் செய்ய வேண்டும். ஆனால் பல நல்ல திட்டங்களை CM கொண்டு வந்துள்ளார். எனவே எங்கள் கூட்டணியே வெல்லும் என்றார். முன்னதாக திமுக தீய சக்தி, தவெக தூய சக்தி என விஜய் ஈரோட்டில் பேசியிருந்தார்.


