News December 5, 2024

டிக்கெட்டின்றி பயணம்: ரூ.1.81 கோடி அபராதம்

image

சேலம் ரயில்வே கோட்டத்தில் கடந்த நவம்பர் மாதத்தில் மட்டும் ரயில்களில் டிக்கெட்டின்றியும், முறைகேடாகவும் பயணித்த 27,500 பயணிகளிடம் ரூ.1.81 கோடி அபராதம் விதிக்கப்பட்டு டிக்கெட் பரிசோதகர்கள் மூலம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக சேலம் கோட்ட ரயில்வேத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முறையாக டிக்கெட் எடுத்து பயணிக்க ரயில்வே துறை அதிகாரிகள் அறிவுறுத்தல். 

Similar News

News November 1, 2025

சேலம்: GAS சிலிண்டர் வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

சேலம் மக்களே, ஒரே நேரத்தில் சிலிண்டர்கள் புக் செய்வதால் வீட்டிற்கு வர தாமதமாகுதா? இனி அந்த கவலை இல்லை (Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122) இந்த எண்களில் வாட்ஸ்அப்பில் “HI” என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க.. அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே கேஸ் வந்துடும். இதை உங்க நண்பர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

News November 1, 2025

வாழப்பாடி அருகே அழுகிய நிலையில் ஆண் சடலம்!

image

வாழப்பாடி அருகே பொன்னாரம்பட்டி பகுதியைச் சேர்ந்த விவசாயி புஷ்பாவின் 80 அடி ஆழ கிணற்றில் நேற்று மதியம் ஆண் பிணம் மிதந்தது. மேலும் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் கிணற்றில் வந்து பிணத்தை மீட்டனர். வயது 30–35, நீல டீ-ஷர்ட் மற்றும் சிமெண்டு நிற அரை பேண்ட் அணிந்தவராகத் தெரிய வந்தார். முகம் சிதைந்து அழுகிய நிலையில் இருந்தது. உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனையில் அனுப்பி விசாரணை நடத்தினர்.

News November 1, 2025

சேலம்: மாணவியின் விபரீத முடிவு!

image

சேலம், நெய்க்காரப்பட்டியை சேர்ந்த இந்துமதி. அரியானூர் பகுதியில் உள்ள தனியார் கலை அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று அவர் வீட்டில் தூக்கில் சடலமாக தொங்குவதாக கொண்டலாம்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இந்துமதியின் சடலத்தை கைப்பற்றி அவர் ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

error: Content is protected !!