News December 5, 2024
திண்டுக்கல்லில் தொழிற் பழகுநர் சேர்க்கை முகாம் அறிவிப்பு

திண்டுக்கல் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் மற்றும் அரசு தொழிற்பயிற்சி நிலையம் இணைந்து நடத்தும் தொழிற் பழகுநர் சேர்க்கை முகாம் குள்ளனம்பட்டியில் அமைந்துள்ள அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் 09.12.24 காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை நடைபெறவுள்ளது. 8,10,12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்த முகாமில் கலந்துகொண்டு இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளலாம் என ஆட்சியர் பூங்கொடி தெரிவித்தார்.
Similar News
News November 1, 2025
அமைச்சர் சக்கரபாணி தலைமையில் கிராம சபை!

திண்டுக்கல் மாவட்டம் தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியம் தொப்பம்பட்டி ஊராட்சியில் இன்று உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்க துறை அமைச்சர் அர.சக்கரபாணி தலைமையில் நடைபெற்றது உடன் பாராளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம் கலந்து கொண்டார். கூட்டத்தில் பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை அமைச்சரிடம் வழங்கினர்.
News November 1, 2025
பழனி அருகே லாரி மீது கார் மோதியதில் ஒருவர் பலி!

திண்டுக்கல் மாவட்டம் பழனி வட்டம் தாழையூத்து அருகில் சாமிநாதபுரத்தில் இன்று(நவம்பர்.1) முன்னால் சென்ற லாரி திடீரென பிரக் பிடித்ததால் பின்னால் வந்த கார் லாரியின் பின்புறம் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் காரை ஒட்டி வந்த கமுதியைச் சேர்ந்தவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் மூவர் காயமடைந்துள்ளனர். இது குறித்து சாமிநாத புரம் காவல் நிலைய அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News November 1, 2025
பழனி அருகே லாரி-கார் மோதல்: ஒருவர் பலி

பழனியை அடுத்த சாமிநாதபுரம் சோதனைச் சாவடி அருகே லாரி-கார் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். முன்பாக சென்ற லாரி திடீரென பிரேக் போட்டதாகப் கூறப்படுகிறது. பின்னால் வந்த கார் அதில் மோதியதில், கார் ஓட்டுநர் பசும்பொன்னையைச் சேர்ந்த கஜேந்திரமூர்த்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் இருவர் படுகாயம் அடைந்து பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். சாமிநாதபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.


