News March 22, 2024
மதுரை கலெக்டர் அறிவிப்பு
மதுரை மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பேருந்து பயண சலுகை வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெறுவோருக்கு இலவச பேருந்து பயண அட்டை வழங்கும் முகாம் பாராளுமன்ற தேர்தலையொட்டி தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுகிறது. எனவே 2023-2024-ம் நிதியாண்டில் 31.03.2024 அன்று முடிவடையும் பேருந்து அட்டையினை 30-06-2024 வரை பயன்படுத்திக்கொள்ள கலெக்டர் சங்கீதா இன்று உத்தரவிட்டுள்ளார்.
Similar News
News November 19, 2024
குழு அமைத்து விசாரணை நடத்த பரிந்துரை – ஆட்சியர்
மதுரை சத்தியமூர்த்தி நகர் பகுதியைச் சேர்ந்த காட்டுநாயக்கர் சமுதாய மக்கள் தங்களுக்கு ST சாதி சான்றிதழ் வழங்க கோரி கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இந்து காட்டு நாயக்கர் பிரிவினருக்கு ST சான்றிதழ் வழங்குவது தொடர்பாக குழு அமைத்து விசாரணை நடத்த அரசுக்கு மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா பரிந்துரை செய்துள்ளார். இதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.
News November 19, 2024
இரவு நேர ரோந்து பணி காவலர்கள் விபரம்.
மதுரை மாவட்ட இரவு நேர காவலர்களின் ரோந்து பணி விபரம் மதுரை மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்டது. இன்று (நவ.19) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஊமச்சிகுளம், சமயநல்லூர், மேலூர், திருமங்கலம், உசிலம்பட்டி போன்ற பகுதிகளுக்கு இரவு நேர ரோந்து பணி அதிகாரிகளின் விவரங்கள் மதுரை மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ளது.
News November 19, 2024
மதுரையில் 420 பஞ்சாயத்துகளில் கிராம சபை கூட்டம்
மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நவ.23 அன்று உள்ளாட்சிகள் தின கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் சங்கீதா தெரிவித்துள்ளார். அதன்படி மாவட்டத்தில் உள்ள 420 கிராம ஊராட்சிகளிலும் நடைபெறும் கிராம சபை கூட்டத்தில், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உள்ளிட்டவைகளை குறித்து விவாதிக்கப்பட உள்ளதால் கிராம மக்கள் தவறாமல் கலந்து கொள்ள அறிவுறுத்தியுள்ளார்.