News December 5, 2024

99 அடியை நெருங்கும் பவானிசாகர் நீர்மட்டம்

image

பவானிசாகர் அணை நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்வதால், அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று அணைக்கு நீர்வரத்து 6,049 கனஅடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேலும், அணை நீர்மட்டம் 98.54 அடியாக உயர்ந்தது. நீர் இருப்பு, 27.60 டி.எம்.சி.,யாக உள்ளது. பாசனத்திற்காக வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

Similar News

News September 18, 2025

ஈரோடு மக்களே முக்கிய அறிவிப்பு

image

ஈரோடு அஞ்சல் கோட்டத்தில் பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம் வரும் 30- ஆம் தேதி காலை 10 மணிக்கு ஈரோடு தபால் அஞ்சல் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.இதில், அஞ்சல் துறை சேவைகள் பற்றி பொதுமக்களின் குறை மற்றும் கோரிக்கை மனுக்கள் தபால் மூலம் 24 தேதிக்குள் முதுநிலை அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளா், ஈரோடு 638001 என்ற முகவரிக்கு அனுப்பலாம் என அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளா்
கி.கோபாலன் தெரிவித்தார்.

News September 18, 2025

ஈரோடு: போக்குவரத்து காவல்துறை விழிப்புணர்வு!

image

ஈரோடு: அந்தியூர் பத்ரகாளியம்மன் கோயில் முன்பு போக்குவரத்து போலீசார் இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும், ஓட்டுநர் உரிமம் இன்றி இரு சக்கர வாகனங்களை ஓட்டக்கூடாது, செல்போன் பேசிக்கொண்டு வாகனங்களை ஓட்டக்கூடாது, காப்பீடு இன்றி வாகனங்களை ஓட்டக்கூடாது, மது போதையில் வாகனங்களை ஓட்டக் கூடாது, 18 வயதுக்குட்பட்டவர்களை வாகனங்கள் ஓட்ட அனுமதிக்க கூடாது என விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

News September 18, 2025

ஈரோட்டில் தெரிய வேண்டிய முக்கியமான செயலி!

image

ஈரோடு மாவட்ட காவல்துறை பொதுமக்கள் பாதுகாப்பை முன்னிட்டு, இணையவழி மோசடிகளைத் தவிர்க்கும் வகையில் புதிய எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், யாரும் ஏமாற்றங்களுக்கு ஆளாகாமல் இருக்க, பொதுமக்கள் அதிக விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டியது அவசியம் என வலியுறுத்தியுள்ளது. “காவல் உதவி” என்ற செயலியை பதிவிறக்கம் செய்து அவசர உதவிகளுக்கு பயன்படுத்தி கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

error: Content is protected !!