News December 5, 2024
டிசம்பர் 5 வரலாற்றில் இன்று!

➤1492 – லா ஸ்பானியோலா தீவில் கொலம்பஸ் கால் பதித்தார். ➤1757 – லெயூத்தன் சமரில் இரண்டாம் பிரெடெரிக் வென்றார். ➤1896 – சென்னை கன்னிமாரா பொது நூலகம் பொது மக்களுக்காகத் திறந்து விடப்பட்டது. ➤1969 – மை லாய் படுகொலைகள் தொடர்பான தகவல்களை லைஃப் இதழ் வெளியிட்டது. ➤2003 – குளிர்திரவ ஏவுகணை சோதனை வெற்றி பெற்றதாக இஸ்ரோ அறிவித்தது. ➤2013 – நெல்சன் மண்டேலா மறைந்த நாள்.
Similar News
News April 29, 2025
சந்தேகத்தால் சிதைந்த குடும்பம்

வீட்டில் அண்ணன் உள்ளாடையுடன் சுற்றித் திரிந்ததால் சந்தேகத்தில் தம்பி தனது மனைவியின் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். உ.பியின் கோரக்பூரில் தம்பிக்கு அண்மையில் திருமணம் நடந்துள்ளது. புதுப்பெண் சரோஜின் சமையலை மாமியார், மைத்துனர் என அனைவரும் பாராட்டியுள்ளனர். இதனை விரும்பாத கணவர் சதீஷ், சரோஜை அழைத்து கண்டித்துள்ளார். பின்னர், சந்தேகத்தில் மனைவியை கொலை செய்ததாக போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.
News April 29, 2025
திருப்பதி ஏழுமலையான் பக்தர்களின் கவனத்திற்கு..!

திருப்பதியில் வரும் பக்தர்களுக்கு சேவை செய்ய தொடங்கப்பட்டது தான் ஸ்ரீவாரி சேவை. இந்த சேவையில் ஜூன் மாதம் பங்கேற்க நாளை அதாவது, ஏப்ரல் 30-ம் தேதி முதல் முன்பதிவு செய்யலாம். காலை 11 மணிக்கு ஜெனரல் சேவைக்கும், மதியம் 12 மணிக்கு நவநீத சேவைக்கும், மதியம் 1 மணிக்கு பரகமணி சேவைக்கும், மதியம் 2 மணிக்கு சீனியர் சேவைக்கும் முன்பதிவு நடைபெறுகிறது. முன்பதிவு செய்ய <
News April 29, 2025
அவையை அமளியாக்கிய ‘ஊர்ந்து’.. CM விளக்கம்!

காவல்துறை மானிய கோரிக்கைக்கு CM அளித்த பதிலுரையில் இடம்பெற்ற ‘ஊர்ந்து’ என்ற சொல்லை அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என அதிமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். அதற்கு பதிலளித்த CM ஸ்டாலின், ஊர்ந்தோ தவழ்ந்தோ என, தான் யாரையும் குறிப்பிடவில்லை என விளக்கம் அளித்தார். முன்னதாக, CM ஸ்டாலின் பதிலுரையை எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ் புறக்கணித்தார்.