News December 5, 2024
பெண் காவலர் தற்காலிக பணியிடை நீக்கம்

மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில், சங்கரநாராயண சுவாமி கோவில் உண்டியல் பணத்தை திருடிய வழக்கில் கைது செய்யப்பட்ட தூத்துக்குடி தென்பாகம் தலைமை காவலர் மகேஸ்வரியை(42) தற்காலிக பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் இன்று உத்தரவிட்டுள்ளார்.
Similar News
News December 13, 2025
தூத்துக்குடி: சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை.. தண்டனை

தூத்துக்குடி பகுதியில் கடந்த 2021-ம் ஆண்டு 10 வயது சிறுமியை தாளமுத்துநகரை சேர்ந்த நிர்மல் குமார் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது தொடர்பாக தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் நிர்மல்குமார் மீது தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு தொடர்ந்தனர். இதில், நிர்மல் குமாருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.
News December 13, 2025
தூத்துக்குடி மாநகராட்சிக்கு இலவச புகார் எண் அறிவிப்பு

தூத்துக்குடி மாநகர பகுதிகளில் சில நேரங்களில் பாதாள சாக்கடை குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேறும் நிலை ஏற்படுகிறது. இதனை உடனுக்குடன் சீர் செய்ய ஏதுவாக, தூத்துக்குடி மாநகராட்சி கட்டணம் இல்லா தொலைபேசி எண் 18002030401-ஐ தொடர்பு கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. இதில் பொதுமக்கள் தங்கள் புகாரினை பதிவு செய்யலாம் என மாநகராட்சி ஆணையர் சி.ப்ரியங்கா தெரிவித்துள்ளார். SHARE
News December 13, 2025
அமைச்சர் அனிதா சொத்து குவிப்பு வழக்கு ஒத்திவைப்பு

தற்போது திமுக அமைச்சராக இருக்கும் அனிதா ராதாகிருஷ்ணன் அதிமுக ஆட்சி காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர்ந்து வழக்கு தூத்துக்குடியில் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. வழக்கு விசாரணை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணை இன்று வந்தது. அப்போது நீதிபதி வழக்கு விசாரணையை வரும் 17-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.


