News December 5, 2024

1 செக்கண்ட்ல 100 ஜிபி.. வேற லெவலில் வரும் நோக்கியா..!

image

ஒரு நொடியில் 100 ஜிபி டவுன்லோடு செய்யும் அதிவேக இணைய சேவைக்கான பரிசோதனையை நோக்கியா வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளது. இத்தாலியைச் சேர்ந்த OPEN FIBER நிறுவனத்துடன் இணைந்து இச்சேவையை விரைவில் வழங்க உள்ளது. இதற்கு உள்கட்டமைப்பு வசதிகளில் எவ்வித மாற்றங்களையும் செய்ய வேண்டியதில்லை என்பது கூடுதல் அம்சம். தற்போது OPEN FIBER நிறுவனம் நொடிக்கு 10 ஜிபி டவுன்லோடு செய்யும் வகையில் சேவையை வழங்கி வருகிறது.

Similar News

News December 30, 2025

CM ஸ்டாலினுக்கு மாரி செல்வராஜ் கோரிக்கை!

image

<<18693605>>திருத்தணியில்<<>> வடமாநில தொழிலாளி தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாக மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார். மனித சமூகத்தின் மதிப்பு புரியாமல் தடம்புரண்டு அலையும் இளைஞர்களை நேர்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க அவர் கோரியுள்ளார். போதை கலாசாரம், சாதி, மத, தாதாயிச தனிநபர் பெருமை ஆகியவற்றின் மீது CM ஸ்டாலின் பாரபட்சமற்ற நடவடிக்கை எடுத்து, அடுத்த தலைமுறையை நெறிப்படுத்தவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

News December 30, 2025

நாடு முழுவதும் நாளை முடங்குகிறது

image

நாடு முழுவதும் நாளை (டிச.31) ஸ்விக்கி, சோமாட்டோ, செப்டோ, பிளிங்கிட் டெலிவரி ஊழியர்கள் வேலைநிறுத்ததில் ஈடுபட உள்ளனர். ஊதிய உயர்வு கோரி இந்த போராட்டத்தை அவர்கள் முன்னெடுக்கின்றனர். இதனால், இந்த நிறுவனங்களின் டெலிவரி சேவை முடங்கலாம் என கூறப்படுகிறது. எனவே, புத்தாண்டுக்கு தேவையான பொருள்களை இன்றே ஆர்டர் செய்து வாங்கிக்கொள்ளுங்கள்.

News December 30, 2025

BREAKING: புதிய ரேஷன் கார்டுகள்.. அரசு அறிவிப்பு

image

புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு ரேஷன் கார்டு கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதாக புகார் எழுந்த நிலையில், TN அரசு விளக்கம் அளித்துள்ளது. அதன்படி, 2021-ம் ஆண்டு மே முதல் தற்போது வரை விண்ணப்பித்தவர்களில் 98.23% பேருக்கு புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து 20.56 லட்சம் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!