News December 4, 2024
தினமும் 777 பேருக்கு நாய் கடி!

ஒடிசாவில் கடந்த 22 மாதங்களில் நாள் ஒன்றுக்கு 777 பேரை நாய்கள் கடித்துள்ளன. ஜனவரி 2023 முதல் அக்டோபர் 2024 வரை 5 லட்சத்திற்கும் அதிகமான நாய் கடி சம்பவங்கள் பதிவாகியுள்ளன. 2023இல் 2,59,107 நாய் கடி சம்பவங்கள் பதிவான நிலையில், 2024 ஜனவரி முதல் அக்டோபர் வரை 2,43,565 சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இதன் காரணமாக தெரு நாய்களுக்கு கருத்தடை செய்வதில் அம்மாநில அரசு கவனம் செலுத்தி வருகிறதாம்.
Similar News
News September 11, 2025
கட்சி பொறுப்பில் இருந்து கூண்டோடு நீக்கம்

காங்கிரஸ் கட்சியில் உள்கட்சி பூசல் உச்சம் தொட்ட நிலையில், கோவையில் 3 தலைவர்களை கூண்டோடு நீக்கி தலைமை உத்தரவிட்டுள்ளது. மாநகர் மாவட்ட தலைவர் கருப்புசாமி, வடக்கு மாவட்ட தலைவர் VMC மனோகரன், தெற்கு மாவட்ட தலைவர் N.K.பகவதி மூவரும் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். 2026 தேர்தலில் கூடுதல் தொகுதிகளை குறிவைத்து தலைமை நகர்ந்தாலும், நிர்வாகிகளிடையே உள்கட்சி பூசல் விவகாரம் பெரும் தலைவலியாக மாறியுள்ளது.
News September 11, 2025
வீட்டில் மின்சாரம் சேமிக்க இதை ட்ரை செய்து பாருங்க!

*ஃபேன், டியூப் லைட்டுகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். *இன்டெக்ஷன் ஸ்டவ்களில் அடிப்பாகம் அகலமான பாத்திரங்களை யூஸ் பண்ணுங்க. *ஃபிரிட்ஜ்களில் அதிகமான பொருள்கள் இருப்பதன் மூலம் குளிர் தன்மையை நீண்ட நேரம் பாதுகாத்து மின்சாரம் மிச்சமாகும். * வீட்டில் சுவற்றின் பெயிண்ட்களுக்கு அடர்த்தி குறைந்த நிறங்களை தேர்வு செய்யலாம். *மிக முக்கியமாக தேவையில்லாத நேரங்களில் லைட், ஃபேன்களை OFF பண்ணிடுங்க. SHARE IT.
News September 11, 2025
FLASH: 4 மாவட்டங்களில் காலை 10 மணி வரை கனமழை!

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் காலை 10 மணி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கும் வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. வெளியே செல்வோர் குடையை ரெடியா எடுத்துட்டு போங்க.