News March 22, 2024

சென்னை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி

image

சென்னையில் புலம்பெயர்ந்து வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக வீடுகளின் தேவை கூடியுள்ளது. இந்நிலையில் வீட்டு வாடகை 10 முதல் 20 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் வாடகை உயர்வுக்கு சொத்து வரியும் ஒரு காரணம் என சொத்து ஆலோசகர்கள் தெரிவிக்கின்றனர்.

Similar News

News November 4, 2025

சென்னை அரசு நிறுவன எண்களை தெரிஞ்சிக்கோங்க

image

சென்னை தலைமை அஞ்சலகம்-044-28542947, பொது அஞ்சலகம் – 044-28542947, அரசு பொது மருத்துவமனை-044-25305000, மல்டி ஷ்பெஷாசிலிட்டி ஹாஸ்பிட்டல்-044-25666000, ஸ்டான்லி ஹாஸ்பிட்டல்- 044-25281347, ராயப்பேட்டை மருத்துவமனை- 044-28483051, IOB-28524171, இந்தியன் வங்கி-25233231, கனரா வங்கி-24346038, மின்வாரிய தலைமை பொறியாளர்-044-28520131. *நண்பர்களுக்கு பகிரவும்*

News November 4, 2025

சென்னையில் மழை!

image

அடுத்த இரண்டு மணி நேரத்துக்கு சென்னை & புறநகர் பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை நகரில் ஒரு சில பகுதிகளில் இன்று (நவ.4) வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரில் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News November 4, 2025

சென்னை பட்டினப்பாக்கத்தில் நுரை- பறந்தது உத்தரவு

image

சென்னை பட்டினப்பாக்கத்தில் கடந்த அக். 22-ல் ஏற்பட்ட நுரை விவகாரத்தில், தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்கை விசாரித்துள்ளது. கழிவுநீர் வெளியேற்றத்தால் ஏற்படும் இந்த நுரை, கடும் சுகாதார அபாயங்களை ஏற்படுத்தக்கூடும் எனக் கவலை தெரிவித்த தீர்ப்பாயம், இதுகுறித்து ஜன. 19-க்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு அரசுத் துறைகளுக்கு நேற்று உத்தரவிட்டுள்ளது.

error: Content is protected !!