News March 22, 2024
தூத்துக்குடியில் 2 நாட்கள் விடுமுறை

தூத்துக்குடி மக்களவை தொகுதியில் தேர்தல் பணி தீவிரமாக நடந்து வரும் நிலையில், மார்ச் 23, 24 ஆகிய 2 நாட்கள் விடுமுறை நாள் என்பதால் வேட்பு மனு தாக்கல் செய்ய இயலாது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வரும் 25ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தாக்கல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மக்களவை தொகுதியில் இதுவரை 5 சுயேட்சை வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News September 9, 2025
BREAKING ஏரலில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பகுதியில் தனியார் செங்கல் சூலை செயல்பட்டு வருகிறது. இங்கு லட்சுமண பெருமாள்(38) என்பவர் செங்கல் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார். இந்த பணியில் ஈடுபட்ட போது அவர் சிறிது நேரத்திற்கு முன்பு மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஏரல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News September 9, 2025
தூத்துக்குடி: 17 கொலை குற்றவாளிகளுக்கு ஆயுள்

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடந்த கொலை வழக்குகளில் போலீசார் விசாரணை நடத்தி அதற்கான குற்றப்பத்திரிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் மேற்பார்வையில் பல்வேறு கொலை வழக்குகள் நீதிமன்றம் மூலம் விசாரணை நடத்தப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த ஆண்டு மட்டும் 17 கொலை குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
News September 9, 2025
கோவில்பட்டி அருகே விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த கணேசன் (47) என்பவர் தச்சு தொழிலாளியாக உள்ளார். இவர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த சுமை ஆட்டோ இவர் மீது மோதியது. இந்த விபத்தில் அவர் பலத்த காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.