News December 4, 2024
1983லேயே வாட்சில் டிவி பார்க்கும் வசதியா?

1983ல் வாட்சில் டிவி பார்க்கும் வசதி இருந்துள்ளது என்றால் நம்பமுடிகிறதா? SEIKO TV வாட்ச் அப்போதே Seiko T001 என்ற பெயரில் வாட்ச் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதில், எங்கிருந்து வேண்டுமானாலும் டிவி பார்க்கலாம். இந்த வாட்ச் வெளியான போது உலகின் சிறிய டிவி என கின்னஸ் புத்தகத்திலும் இடம் பெற்றது. அப்போது இதன் விலை $400. இந்த வாட்ச் 1983ல் வெளியான ஜேம்ஸ் பாண்ட் படமான Octopussy படத்தில் இடம் பெற்றது.
Similar News
News December 29, 2025
லெஜண்ட் கிரிக்கெட்டர் காலமானார்

இங்கிலாந்தின் Ex வீரர் ஹக் மோரிஸ் (62) புற்றுநோய் பாதிப்பால் உயிரிழந்துள்ளார். இவர் 3 டெஸ்டில் மட்டுமே விளையாடினாலும், முதல் தர கிரிக்கெட்டில் 53 சதங்கள், 98 அரைசதங்கள் என 19,785 ரன்கள் குவித்துள்ளார். இவர் 2007 முதல் 2013 வரை நிர்வாக இயக்குனராக செயல்பட்ட காலத்தில் ENG, 3 முறை ஆஷஸ் தொடரையும், 2010-ல் டி20 உலக கோப்பையையும் வென்றது. இவரது மறைவுக்கு ரவி சாஸ்திரி உள்ளிட்டோர் இரங்கல் கூறியுள்ளனர்.
News December 29, 2025
இன்றைய நல்ல நேரம்

▶டிசம்பர் 29, மார்கழி 14 ▶கிழமை: திங்கள் ▶நல்ல நேரம்: 6:15 AM – 7:15 AM & 4:45 PM – 5:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 9:15 AM – 10:15 AM & 7:30 PM – 8:30 PM ▶ராகு காலம்: 7:30 AM – 9:00 AM ▶எமகண்டம்: 10:30 AM – 12:00 PM ▶குளிகை: 1:30 PM – 3:00 PM ▶திதி: தசமி ▶பிறை: வளர்பிறை ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர்
News December 29, 2025
காஷ்மீர் முன்னாள் CM வீட்டு சிறையில் அடைப்பு

காஷ்மீரில் இடஒதுக்கீட்டுக்கு எதிராக மாணவர்கள் இன்று போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்து இருந்தனர். இதற்கு ஆதரவு தெரிவித்த அம்மாநில முன்னாள் CM மெஹ்பூபா முஃப்தி, அவரது மகள் இல்திஜா முஃப்தி, தேசிய மாநாட்டு கட்சி MP அகா சையத் ருஹுதுல்லா மெஹ்தி உள்ளிட்ட தலைவர்கள் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர். அதேபோல், மாணவர் சங்க தலைவர்களும் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.


