News December 4, 2024

வேலூர் எஸ்பி அலுவலகத்தில் குறைதீர்வு கூட்டம்

image

வேலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் வாரம்தோறும் புதன்கிழமை நடைபெறும் குறைதீர்வு கூட்டம் இன்று (டிசம்பர் 4) நடந்தது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மதிவாணன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளிடம் வழங்கி விசாரணை நடத்த உத்தரவிட்டார். மேலும், இன்று நடந்த முகாமில் 19 மனுக்கள் பெறப்பட்டதாக தெரிவித்தனர்.

Similar News

News February 26, 2026

வேலூர்: அதிமுக நிர்வாகி பைக் திருட்டு – போலீசார் விசாரணை

image

குடியாத்தம் பிச்சனூர் பேட்டை பகுதியை சேர்ந்த அதிமுக நிர்வாகி விஜயகுமார். இவர் நேற்று நெல்லூர் பேட்டையில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சிக்கு பைக்கை நிறுத்தி விட்டு சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது பைக் திருட்டு போனது தெரிய வந்தது. பின்னர் குடியாத்தம் டவுன் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து காணாமல் போன பைக்கை தேடி வருகின்றனர்‌.

News February 26, 2026

வேலூர்: குடும்பப் பெண் தூக்கிட்டு தற்கொலை

image

குடியாத்தம் அணங்காநல்லூர் பகுதியை சேர்ந்தவர் வேலாயுதம், ஆட்டோ டிரைவர். இவரது மனைவி கோட்டீஸ்வரி(30). இவர்களுக்கு திருமணமாகி 12 ஆண்டுகள் ஆகிறது. இந்நிலையில் 24-ம் தேதி கோட்டீஸ்வரி திடீரென வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த குடியாத்தம் தாலுகா போலீசார் கோட்டீஸ்வரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

News February 26, 2026

வேலூர்: ஆழ் கிணற்றில் ஆண் பிணம் மீட்பு

image

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த காளியம்மன்பட்டி எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் உள்ள கிணற்றில் ஆண் பிணம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்தவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து குடியாத்தம் டவுன் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!