News December 4, 2024

திருச்சியில் 500 பேர் கைது

image

திருச்சி மரக்கடை எம்.ஜி.ஆர் சிலை அருகில் இன்று வங்கதேச இந்து உரிமை மீட்பு குழு சார்பில் வங்கதேச இந்துக்கள் புறக்கணிப்பு செய்யப்படுவதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான பாஜக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். அப்போது அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக 500க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

Similar News

News October 25, 2025

திருச்சி: கல்விக்கடன் முகாமில் ரூ.7.35 கோடி கடன் வழங்கல்

image

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், கல்லூரி மாணவர்களுக்கான கல்விக்கடன் முகாம் நேற்று நடைபெற்றது. இதில் மருத்துவம், பிசியோதெரபி, பொறியியல், வேளாண்மை உள்ளிட்ட கல்லூரிகளில் பயின்று வரும் 109 மாணவர்களுக்கு, பல்வேறு வங்கிகளின் சார்பில் ரூ.7.35 கோடி மதிப்பிலான கல்வி கடன் உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

News October 25, 2025

திருச்சி: மாவட்ட வருவாய் அலுவலர் இடமாற்றம்

image

தமிழக அரசு இன்று 17 ஐஏஎஸ் அதிகாரிகளை பதவி உயர்வு மற்றும் இடமாற்றம் செய்துள்ளது. அதன் அடிப்படையில் திருச்சி மாவட்டத்தில் வருவாய் அலுவலராக பணிபுரிந்த ராஜலக்ஷ்மி, சிறப்பு நில எடுப்பு வருவாய் அலுவலர் ( நெடுஞ்சாலை துறை ) ஆக பதவி உயர்வு பெற்றுள்ளார். இவருக்கு பதிலாக ஆர் பாலாஜி திருச்சி மாவட்ட வருவாய் அலுவலராக பதவியேற்க உள்ளார்.

News October 24, 2025

திருச்சி மாநகராட்சிக்கு புகார் எண் அறிவிப்பு

image

திருச்சி மாநகராட்சியில் வடகிழக்கு பருவமழை எதிர்கொள்ள கண்காணிப்பு அலுவலகம் 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது. மாநகராட்சி மைய அலுவலகத்தில் உள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு அறையை 8300113000 மற்றும் 0431-3524200 ஆகிய எண்களில் திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் என மாநகராட்சி கமிஷனர் மதுபாலன் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!