News December 4, 2024
விழிப்புணர்வுடன் இருக்க அறிவுறுத்தல்

நெல்லை மாநகர காவல்துறை இன்று வெளியிட்டுள்ள விழிப்புணர்வு பதிவில் வங்கிகள், கொரியர் நிறுவனங்கள், அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் போன்று ஆள்மாறாட்டம் செய்யும் சைபர் குற்றவாளிகளின் ஆடியோ, வீடியோ அழைப்புகள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள். இவர்கள் சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் எடுப்பதாக அச்சுறுத்துவார்கள் அல்லது உடனடியாக பணப்பரிமாற்றம் செய்ய சொல்வார்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தினர்.
Similar News
News October 19, 2025
நெல்லை: தீபாவளி – மின்வாரியம் முக்கிய அறிவிப்பு

நெல்லை மாவட்டம் மின்வாரியம் சார்பில் இன்று வெளியிடபட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: தீபாவளி கொண்டாட்டத்தின் போது பாதுகாப்பான முறையில் பட்டாசுகளை வெடிக்க வேண்டும். குறிப்பாக மின்கம்பங்கள் மின் மாற்றிகள் உள்ள இடங்களில் வானை நோக்கி செல்லும் பட்டாசுகளை வெடிப்பதை தவிர்க்க வேண்டும் மற்ற பட்டாசுகளையும் மின்கம்பங்கள் அருகே வைத்து வெடிக்க கூடாது. இதனால் மின் விபத்து ஏற்படுவதை தவிர்க்க முடியும்.
News October 19, 2025
நெல்லை: இலவச தையல் இயந்திரம் APPLY லிங்க்!

நெல்லை மாவட்ட மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு
1. இங்கு<
2. Social Welfare என்பதை தேர்ந்தெடுக்கவும்.
3. “Sathiyavani Muthu Ammaiyar” திட்டத்தை தேர்வு செய்து, வருமான சான்று உள்ளிட்டவைகளை பதிவு செய்து விண்ணப்பியுங்க.( வீட்டிலிருந்தே விண்ணப்ப நிலையை பார்க்கலாம்) மற்றவர்களும் பயனடைய SHARE செய்யுங்க!
News October 19, 2025
நெல்லையில் அல்வாவுக்கு நீண்ட “கியூ”

நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் நெல்லையில் அனைத்து வகையான தீபாவளி பொருட்கள் விற்பனை களை கட்டியுள்ளது. உலகப்புகழ்பெற்ற நெல்லை இருட்டுக்கடை அல்வா வாங்குவதற்கு வழக்கத்தை விட மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. நெல்லை ரத வீதியில் நீண்ட வரிசையில் நின்று அல்வா வாங்க மக்கள் காத்திருந்தனர். இதுபோல் அனைத்து இனிப்பு கடைகளிலும் விற்பனை ஜோராக நடைபெற்று வருகிறது.