News December 4, 2024
நாகை விவசயிகளுக்கு இலவச மரக்கன்றுகள்

2024 – 25 ராஷ்ட்ரிய க்ரிஷி விகாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வேளாண் காடு வளர்ப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் விவசாயிகள் தங்கள் வயல் வரப்புகளில் மரக்கன்றுகள் சாகுபடி செய்ய ஏதுவாக தேக்கு கொய்யா, மருது, இலுப்பை, நாவல் போன்ற மரக்கன்றுகள் 100 சதவிகித மானியத்தில் வழங்கப்படுகின்றன. எனவே இதில் பயன்பெற விவசாயிகள் உழவன் செயலி மூலம் பதிவு செய்ய ஆட்சியர் ஆகாஷ் கேட்டு கொண்டுள்ளார்.
Similar News
News January 15, 2026
நாகை: அரசு ஊழியர் லஞ்சம் கேட்டால் என்ன செய்வது?

சான்றிதழ்கள் வழங்குவது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா, சிட்டா, அடங்கல் சான்றிதழ் வழங்குவது உள்ளிட்டவை வட்டாட்சியரின் (தாசில்தார்) முக்கிய பணிகளாகும். இவற்றை முறையாக செய்யமால் தாசில்தாரோ அல்லது அலுவலக ஊழியர் யாரவது உங்களிடம் லஞ்சம் கேட்டால், நாகை மாவட்ட மக்கள் 04365-248460 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தயங்காமல் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க!
News January 15, 2026
நாகை மாவட்ட கலெக்டர் அறிவிப்பு

நாகை மாவட்டத்தில் 2026-27 ஆம் கல்வியாண்டில் புதிய தொழிற்பள்ளிகள் தொடங்க, அங்கீகாரம் புதுப்பிக்க, மற்றும் புதிய பிரிவுகளை ஆரம்பிக்க இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு விண்ணப்பிக்க பிப்ரவரி 28-ம் தேதியே கடைசி நாளாகும். எனவே விருப்பமுள்ளவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை அணுகலாம் என கலெக்டர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
News January 15, 2026
நாகை: ரூ.5 லட்சம் இலவச காப்பீடு.. APPLY NOW!

நாகை மக்களே, முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். இத்திட்டத்தைப் பெற, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வருமானச் சான்றிதழ் ஆகியவற்றுடன் நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மருத்துவ அடையாள அட்டை வழங்கும் மையத்தில் பதிவு செய்து, அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ளலாம். இதனை SHARE பண்ணுங்க.!


