News December 4, 2024
சட்ட படிப்பு காலி இடங்களுக்கு கலந்தாய்வு

புதுச்சேரி, அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் முதுகலை சட்ட படிப்பு மற்றும் முதுகலை பிரெஞ்சு சட்ட பட்டய படிப்புக்கான 2024-25ஆம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு கடந்த 16ஆம் தேதி நடந்தது. இதில், முதுகலை சட்ட படிப்பில் 4 இடங்களும், முதுகலை பிரெஞ்சு சட்ட பட்டைய படிப்பில் 5 இடங்களும் காலியாக உள்ளன. இந்த இடங்களை நிரப்புவதற்கான மாப்-ஆப் கவுன்சிலிங் வரும் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. ஷேர் செய்யவும்
Similar News
News November 15, 2025
புதுச்சேரி: குறை தீர்வு முகாம் அறிவிப்பு

புதுச்சேரி டிஜிபி ஷாலினிசிங் உத்தரவின்படி புதுச்சேரிக்கு உட்பட்ட காவல் நிலையங்களில், (நவ.15) பொதுமக்கள் குறை தீர்வு முகாம் நடைபெறும் என புதுச்சேரி முதுநிலை காவல் கண்காணிப்பாளர் கலைவாணன் தெரிவித்துள்ளார். இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளைப் புகார் மூலம் தெரிவிக்கலாம் அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
News November 14, 2025
காரைக்காலில் மின் கட்டணம் வசூல் மையம் இயங்கும்

மின் நுகர்வோர்கள் கவனத்திற்கு நாளை (15.11.2025) சனிக்கிழமை காரைக்கால் டவுன், தலைமை அலுவலகம், நேரு நகர், கோட்டுச்சேரி, நெடுங்காடு, அம்பகரத்தூர், திருநள்ளார், நிரவி மற்றும் திருமலைராயன்பட்டினம் மின் தொகை வசூல் மையம் காலை 8.45 முதல் மதியம் 1.00 மணி வரை வழக்கம் போல் இயங்கும் என அறிவிக்கப்படுகிறது. மின் கட்டண பாக்கியனை உடனடியாக செலுத்தி மின் துண்டிப்பை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News November 14, 2025
காரைக்கால் நிர்வாகம் சார்பில் வாக்காளர் உதவி மையம்

காரைக்கால் மாவட்டத்தில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி 2026 நடைபெற்று வருகிறது. இது சம்பந்தமான விவரங்களை பெற காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இதற்கென வாக்காளர் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கட்டணமில்லா தொலைபேசி எண் 1950 யை பயன்படுத்தியும் விவரங்களை தெரிந்து கொள்ளலாம், மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


