News December 4, 2024
மருத்துவ சேவையால் வாழ்நாள் அதிகரிப்பு: நெல்லை GH டீன்

நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் ரேவதி பாலன் நேற்று கூறுகையில், எச்ஐவியால் பாதிக்கப்பட்ட மக்களிடையே காணப்படும் தயக்கத்தையும் அறியாமையையும் அகற்ற ஒவ்வொரு வருடமும் ஒரு புதிய கருத்தை முன்வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இங்கு கிடைக்கும் முழுமையான எச்ஐவி சிகிச்சைகள் மற்றும் பொது மருத்துவ சேவையால் பாதிக்கப்பட்டவர்கள் வாழ்நாள் அதிகரித்துள்ளதாக தெரிவித்தார்.
Similar News
News November 18, 2025
நெல்லை: ரூ.250யில் மாஸ்டர் ஹெல்த் செக்கப்

நெல்லை ஹை கிரவுண்ட் அரசு மருத்துவமனையில் ரூ.250-ல் மாஸ்டர் ஹெல்த் செக்கப் செய்யப்படுகிறது. ஸ்கேன், எக்ஸ் ரே, இசிஜி உள்ளிட்ட சேவைகள் இதில் அடங்கும். தேவையான பிற பரிசோதனைகளும் செய்யப்படும். மருத்துவர்களின் ஆலோசனையும் கிடைக்கும். தேவைப்படுபவர்கள் வார்டு 17 ஐ அணுகவும். பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. *ஷேர் பண்ணுங்க

நெல்லை மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலார்ட்!

அரபிக்கடலை நோக்கி நகரும் புயல் சின்னம், குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேற்கு திசையில் நகர்வதால், ஈரப்பதம் உள்ளே தள்ளப்பட்டு உள் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. தென் தமிழக மாவட்டங்களான மதுரை, சிவகங்கை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், தேனி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். நெல்லை மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலார்ட் விடுக்கப்பட்டுள்ளது.