News December 4, 2024
விற்பனையாளர் கட்டுணர் தேர்வு: 2,398 பேர் ஆப்சன்ட்

கன்னியாகுமரி மாவட்டத்தில் நியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுணர்களுக்கான நேர்முகத் தேர்வு நடைபெற்றது. மொத்தம் 5,201 விண்ணப்பித்த நிலையில் 3,232 பேர் நேர்முகத் தேர்வில் கலந்து கொண்டனர். கட்டுணர் பணிக்கு 787 பேர் விண்ணப்பித்த நிலையில், 360 பேர் பங்கு பெற்றனர். இந்த தேர்வில் மொத்தம் 2,398 பேர் பங்கேற்கவில்லை.
Similar News
News January 3, 2026
குமரி வாக்காளர்களுக்கு சூப்பர் UPDATE!

குமரி மக்களே வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிய வழி ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம். அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இதனை அனைவருக்கும் அதிகமாக ஷேர் பண்ணுங்க!
News January 3, 2026
குமரி: பொங்கல் பண்டிகைக்கு சிறப்பு ரயில்..

பொங்கல் பண்டிகை இம்மாதம் கொண்டாடப்பட இருக்கிறது. இதனையொட்டி பொதுமக்கள் வசதிக்காக நாகர்கோவிலில் இருந்து தாம்பரத்திற்கு ஜன.,11 (ம) 18-ஆம் தேதிகளிலும், தாம்பரத்தில் இருந்து ஜன.,12 மற்றும் 19-ஆம் தேதிகளிலும் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இதைப்போல் கன்னியாகுமரியில் இருந்து தாம்பரத்திற்கு ஜன.,13, 20 தேதிகளிலும், தாம்பரத்திலிருந்து குமரிக்கு ஜன.,14, 21 ஆகிய தேதிகளிலும் சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
News January 3, 2026
குமரி: கார் கண்ணாடியை உடைத்த நபரால் பரபரப்பு…

குமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே உள்ள ஆசாரிப்பள்ளம் பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் இன்று (ஜன.3) அதிகாலை சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் கண்ணாடியை உடைத்துள்ளார். இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவரை பிடித்து மனநல காப்பகத்தில் சேர்க்க நடவடிக்கை எடுத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


