News December 4, 2024

கோவையில் ஹெச்.ராஜா கைது

image

கோவை சிவானந்தா காலனியில் வங்கதேச இந்துக்களுக்கு பாதுகாப்பு தேவை என்று போராடிய பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவை போலீசார் கைது செய்தனர். இந்தப் போராட்டத்தில் இந்துத்துவ அமைப்புகள், மடாதிபதிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்தப் போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்ததால், அதனை மீறி ஆர்ப்பாட்டம் செய்த ஹெச்.ராஜா கைது செய்யப்பட்டார். இதேபோல், தமிழகத்தில் பல இடங்களில் பாஜகவினர் கைது செய்யப்பட்டனர்.

Similar News

News October 17, 2025

BREAKING: அதிமுக கூட்டணி.. இரவில் சந்தித்து பேசினார்

image

NDA கூட்டணியில் மீண்டும் பாமகவை கொண்டுவரும் முயற்சி தொடங்கியுள்ளது. சென்னையில் நேற்று இரவு அன்புமணியின் வீட்டில் BJP தேர்தல் பொறுப்பாளர் பைஜயந்த் பாண்டா பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, PMK-வின் கோரிக்கைகள், சீட்டு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. அன்புமணி, 25+1(RS) சீட்டு கேட்டதாக தெரிகிறது. முன்னதாக, கடந்த வாரம் ஹாஸ்பிடலில் இருந்த ராமதாஸிடம், கூட்டணி தொடர்பாக EPS பேசியிருந்தார்.

News October 17, 2025

இனி புது வீடு கட்ட இதெல்லாம் கட்டாயம்

image

பொது கட்டட விதிகளில் சில திருத்தங்கள் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் 3,300 சதுர அடி வரையிலான தனி வீடுகளில், 2 கார் மற்றும் 2 பைக் நிறுத்துமிடம் ஒதுக்குவதை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதேபோல், அடுக்குமாடி குடியிருப்புகளில் இணையதள சேவை மற்றும் தொலை தொடர்பு வசதிகளுக்கான கட்டமைப்பு ஏற்படுத்துவது அவசியம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 17, 2025

வயிற்று கொழுப்பு கரைய காலையில் இத பண்ணுங்க

image

ஃபிட்டாக இருக்க வேண்டும் என்பதை விட, பலருக்கும் தொப்பை இருக்கக்கூடாது என்பது தான் முக்கிய குறிக்கோளாக இருக்கும். அப்படி நினைப்பவர் தான், நீங்கள் என்றால், காலையில் Abdominal Crunches பண்ணுங்க. படத்தில் உள்ளது போல, கால்களை மடக்கி, கைகளை தலைக்கு பின்னால் வைத்து பிடித்து கொள்ளவும். மெதுவாக, மார்பை மட்டும் மேலே உயர்த்தி, முடிந்தவரை முன்னே வரவும். இப்படி 15 முறை 2 செட்களாக செய்யலாம். SHARE IT.

error: Content is protected !!