News December 4, 2024
ஊட்டி மலை ரயில் இன்று முதல் இயக்கம்

தொடர் கன மழையால் மலை ரயில் பாதையில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதால் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கடந்த திங்கள் முதல் நேற்று வரை மலை ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்திருந்தது. தற்பொழுது நிலைமை சீராக உள்ளதால் ஊட்டி மலை ரயில் மேட்டுப்பாளையம் முதல் ஊட்டி வரை இயங்க ஆரம்பித்துள்ளது. எனவே சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Similar News
News August 11, 2025
நீலகிரி: உதவியாளர் வேலை.. ரூ.96,000 சம்பளம்!

நீலகிரி மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியில் காலியாக உள்ள 22 உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு மாத சம்பளமாக ரூ.23,640 முதல் ரூ.96,395 வரை வழங்கப்படுகிறது. இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <
News August 11, 2025
ஓவேலியில் யானை தாக்கி ஒருவர் மரணம்

கூடலூர் அடுத்து ஓவேலி பேரூராட்சி நியோப் பகுதியை சேர்ந்த விவசாயி மணி என்பவரை, யானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார், இந்த சம்பவம் இப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த சம்பவம் குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் யானையால் தொடர்ந்து மனித உயிர் இழப்புகள் ஏற்படுவதால் மக்கள் அனைவரும் அச்சத்தில் உள்ளனர்.
News August 11, 2025
நீலகிரி மாவட்ட ஆட்சியர் முக்கிய தகவல்

தமிழக முதல்வர் தலைமையில் இன்று போதைப் பொருட்களுக்கு எதிரான உறுதிமொழி எடுக்கும் நிகழ்வு ஊட்டி ரெக்ஸ் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் காணொளி வாயிலாக பள்ளி மாணவ, மாணவியருக்கு காட்டப்படுகிறது. போதைப் பொருளுக்கு எதிராக பொதுமக்கள் https://www.drugfreetamilnadu.tn.gov.in/enpledge முகவரியில் உறுதிமொழி எடுத்துக் கொண்டு சான்றிதழ் பதிவிறக்கம் செய்யலாம் என மாவட்ட ஆட்சியர் லக்ஷ்மி பவ்யா தண்ணீரு அறிவித்துள்ளார்.