News December 4, 2024
மாவட்ட ஆட்சியர் தலைமையில் விழிப்புணர்வு கருத்தரங்கு

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் பாலின அடிப்படையிலான வன்முறையை ஒழிப்பதற்கான விழிப்புணர்வு கருத்தரங்கு மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தலைமையில் நடைபெற்றது. துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Similar News
News August 15, 2025
20 பயனாளிகளுக்கு விலையில்லா தையல் இயந்திரங்கள் வழங்கல்

மயிலாடுதுறை ராஜன் தோட்டம் சாய் விளையாட்டு மைதானத்தில் இன்று நடைபெற்ற 79வது சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் 20 பயனாளிகளுக்கு ₹1,33,800 மதிப்பிலான விலையில்லா தையல் இயந்திரங்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
News August 15, 2025
தேசிய கொடி ஏற்றி மரியாதை செய்த மாவட்ட ஆட்சியர்

மயிலாடுதுறையில் நாட்டின் 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் இந்திய விளையாட்டு ஆணையம் மைதானத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து மாவட்ட எஸ்பி முன்னிலையில் நடைபெற்ற காவலர் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டார். இவ்விழாவில் மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
News August 15, 2025
மயிலாடுதுறை: சொந்த ஊரில் அரசு வேலை!

தமிழ்நாடு கூட்டுறவு துறையின் கீழ் மயிலாடுதுறை மாவட்டத்தில் காலியாக உள்ள ’33’ Assistant / Clerk / Junior Assistant பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளன. ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் <