News March 22, 2024
அரசியலமைப்புக்கு எதிராக செயல்படுகிறார்

அரசியலமைப்பு நெறிமுறைகளுக்கு எதிராக செயல்படுவதை தனது கொள்கையாகவே ஆளுநர் ஆர்.என்.ரவி வைத்துள்ளதாக அமைச்சர் பிடிஆர். பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர், “ஆளுநர் தான் செய்ய வேண்டிய வேலைகளை செய்ய மறுக்கிறார். பதவிப்பிரமாணம் செய்வதை தவிர்க்கிறார். ஆளுநர் உரையை வாசிக்க மறுக்கிறார். மசோதாக்களை தொடர்ந்து கிடப்பில் போட்டு வைத்துள்ளார்” எனத் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 4, 2025
BREAKING: 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி அறிவிப்பு

12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2-ம் தேதி முதல் மார்ச் 26-ம் தேதி வரை நடைபெறும் எனவும் மே 8-ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவித்துள்ளார். 2025 – 2026 கல்வியாண்டில் மொத்தம் 8,07,000 மாணவ, மாணவிகள் +2 தேர்வை எழுத உள்ளனர். மேலும், +2 கணக்கு பதிவியல் தேர்வுக்கு கால்குலேட்டர் பயன்படுத்த முதல்முறையாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
News November 4, 2025
இது ரீ-ரிலீஸ் மாதம்!

இந்த மாதம் பெரிய படங்களின் ரிலீஸ் இல்லை என்றாலும், விஜய், கமல் ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ் உள்ளது. ஆம், இந்த மாதம் கிட்டத்தட்ட 4 படங்கள் ரீ-ரிலீஸாகவுள்ளன ✦வரும் 6-ம் தேதி நாயகன் ✦வரும் 14-ம் தேதி ஆட்டோகிராஃப் ✦வரும் 21-ம் தேதி ஃபிரண்ட்ஸ். இந்த படங்களுடன் சேர்த்து தள்ளிவைக்கப்பட்ட அஜித்தின் ‘அட்டகாசம்’ படமும் இந்த மாதம் வெளியாகும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. எந்த படம் பார்க்க நீங்க வெயிட்டிங்?
News November 4, 2025
சற்றுமுன்: ₹3,000 விலை குறைந்தது

வெள்ளி விலை இன்று(நவ.4) கிராமுக்கு ₹3 குறைந்து ₹165-க்கும், பார் வெள்ளி கிலோவுக்கு ₹3,000 குறைந்து ₹1,65,000-க்கும் விற்பனையாகிறது. கடந்த மாத இறுதியில் மளமளவென சரிந்து வந்த வெள்ளி நவம்பர் மாதம் தொடங்கியது முதலே தினமும் உயர்ந்து வந்தது. தற்போது, மீண்டும் சர்வதேச சந்தையில் வெள்ளி விலை வீழ்ச்சியடைந்து 1 அவுன்ஸ்(28g) $48.08 ஆக சரிந்துள்ளது. நம்மூர் சந்தையிலும் மீண்டும் வெள்ளி விலை சரிவைக் கண்டுள்ளது.


