News December 4, 2024
ஏற்காட்டில் ரூ.150க்கு தக்காளி

சேலம், ஏற்காடு மலைப்பகுதியில் மண்சரிவால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயரும் அபாயம் உள்ளது. 1 கிலோ தக்காளி ரூ.150-க்கு விற்பனையானது. இதனால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.
Similar News
News October 19, 2025
சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்!

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.
News October 18, 2025
சேலம்: அனுமதி பெற்று ஆர்ப்பாட்டங்கள் நடக்க வேண்டும்

சேலம் மாநகர காவல் ஆணையாளர் அனில்குமார் கிரி வெளியிட்டுள்ள உத்தரவில்; சேலம் மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அரசியல் கட்சிகள், சங்கங்கள், தன்னார்வத்தொண்டு நிறுவனங்கள், போராட்டங்கள் நடத்துவது ,உண்ணாவிரதம் மேற்கொள்வது, விழிப்புணர்ச்சி நிகழ்த்துவது நடத்துவதோ, ஐந்து நாட்கள் முன்னதாக விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
News October 18, 2025
சேலம் மாவட்ட காவல்துறை விழிப்புணர்வு!

சேலம் மாவட்ட காவல்துறை சார்பாக தினமும் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று (அக்டோபர்.18) “வாகனம் ஓட்டும் போது சாலையில் கவனம் தேவை தொலைபேசியில் அல்ல.” என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படத்தை காவல் துறை சார்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஷேர் செய்யவும்!