News December 4, 2024
வடிவேலு பாணியில் புகார்

ம.பி.யில் தேவ்தாஸ் என்பவர் தனது விவசாய நிலத்தில் இருந்த கிணற்றை 6 மாதங்களாக காணவில்லை என ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். கடந்த 6 மாதங்களாக பல அரசு அலுவலகங்களில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என வேதனை தெரிவித்துள்ளார். விசாரணையில் மது போதையில் இருந்த எழுத்தர் நிலத்தை பிரிக்கும்போது ஆவணத்தில் தவறாக குறித்திருப்பதும், கிணறு அவரது நிலத்திலேயே இருந்ததும் தெரியவந்தது.
Similar News
News October 28, 2025
3 நாள் STOP பண்ணுங்க.. அதிசயம் நடக்கும்!

இன்றைய ஜெனரேஷனின் மிகப்பெரிய சாபமே, ஸ்மார்ட்போன்தான். தொடர்ந்து 3 நாள்களுக்கு, போன் பயன்படுத்துவதை நிறுத்தியவர்களின் மூளையில் சிறப்பான மாற்றங்கள் ஏற்படும் என ஆய்வுகள் கூறுகின்றனர். 72 மணிநேரம் போன் பயன்படுத்துவதை நிறுத்தி இளைஞர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில், அவர்களின் மூளை தன்னைத் தானே Reboot செய்துகொண்டது கண்டறியப்பட்டுள்ளது. நீங்களும் ட்ரை பண்ணலாமே?
News October 28, 2025
World சந்தையில் தங்கம் விலை மீண்டும் கடும் சரிவு

சர்வதேச சந்தையில் தங்கம் விலை மீண்டும் கடும் வீழ்ச்சியை கண்டுள்ளது. ஒரே நாளில் 1 அவுன்ஸ்(28g) $119 குறைந்துள்ளது. அதாவது இந்திய மதிப்பில் ₹10,492 குறைந்துள்ளது. கடந்த 22-ம் தேதி $240 குறைந்திருந்த நிலையில், மீண்டும் பெரிய அளவில் சரிந்து $3,994-க்கு விற்பனையாகிறது. இதனால், இந்திய சந்தையிலும் எதிரொலித்து தங்கம் விலை பெரிய அளவில் குறைய வாய்ப்புள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர்.
News October 28, 2025
உள்நோக்கத்துடன் ஒருநாள் முன்னர் தான் அனுமதி: தவெக

பொதுக்கூட்டம் நடத்துவதற்கு ஒருநாள் முன்னர்தான் உள்நோக்கத்துடன் அனுமதி அளிக்கப்பட்டதாக தவெக, சென்னை HC-ல் தெரிவித்துள்ளது. கரூர் துயரம் தொடர்பான வழக்கு விசாரணையின்போது, முன்கூட்டியே அனுமதி அளித்தால் அசம்பாவிதங்கள் நடைபெறாது என கூறியது. நிபந்தனைகள் விதிப்பதிலும் பாரபட்சம் காட்டப்படுவதாக குற்றஞ்சாட்டியது. இதையடுத்து எல்லா கட்சிகளுக்கும் முன்கூட்டியே அனுமதி வழங்க வேண்டும் என HC அறிவுறுத்தியுள்ளது.


