News December 4, 2024
ரேஷன் அட்டைதாரருக்கு ரூ.10,000 வழங்குக: ராமதாஸ்

ரேஷன் அட்டைதாரருக்கு தலா ரூ.10,000 வழங்க டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் மட்டுமின்றி, பிற மாவட்டங்களிலும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.10,000 இழப்பீடு வழங்க அவர் கோரியுள்ளார். நெற்பயிர்களுக்கு எந்தவித நிபந்தனையும் இல்லாமல் ஏக்கருக்கு ரூ.40,000 வீதம் இழப்பீடு வழங்கவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
Similar News
News August 23, 2025
போதை பழக்கத்தை தடுக்க புதிய முயற்சி: CBSE அறிவிப்பு

மாணவர்களிடையே போதை பழக்கத்தை தடுக்க, தேசிய போதைப்பொருள் தடுப்பு அமைப்புடன் (NCB), CBSE ஒப்பந்தம் செய்யவுள்ளது. இதன்படி, போதைப் பொருள்களை தடுப்பது குறித்து, நாடு முழுவதும் CBSE பள்ளிகளில் முதல்வர்கள் மற்றும் கவுன்சிலர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். இவர்கள் மாணவர்களிடம் போதைப் பழக்கத்தின் தீமைகள், பாசிடிவ் லைப்ஸ்டைலின் நன்மைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவர். தமிழக அரசும் இதை பின்பற்றலாமே?
News August 23, 2025
ராசி பலன்கள் (23.08.2025)

➤ மேஷம் – ஜெயம் ➤ ரிஷபம் – கவலை ➤ மிதுனம் – பக்தி ➤ கடகம் – பரிசு ➤ சிம்மம் – நன்மை ➤ கன்னி – வெற்றி ➤ துலாம் – உதவி ➤ விருச்சிகம் – சிக்கல் ➤ தனுசு – நோய் ➤ மகரம் – லாபம் ➤ கும்பம் – திறமை ➤ மீனம் – சாதனை.
News August 23, 2025
Gpay, Phonepe பயன்படுத்த கட்டணம்?

இதுவரை இலவசமாக உள்ள UPI சேவைக்கு, விரைவில் கட்டணம் விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எப்போதும் UPI சேவையை இலவசமாக வழங்க முடியாது என RBI கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா கூறியபோதே இந்த சந்தேகம் எழுந்தது. இந்நிலையில், சில்லறை வணிக பரிவர்த்தனையை கையாளும் வங்கிகளுக்கு வழங்கப்பட்ட 0.25% ஊக்கத்தொகையை அரசு தற்போது 0.15% ஆகக் குறைத்துள்ளதால், விரைவில் கட்டணம் விதிக்கப்படலாம் என்ற சந்தேகம் வலுக்கிறது.