News December 4, 2024

ஃபெஞ்சல் புயல், வெள்ள பலி 26ஆக உயர்வு

image

ஃபெஞ்சல் புயல், கனமழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 26ஆக அதிகரித்துள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் 12 பேரும், திருவண்ணாமலையில் 10 பேரும் உயிரிழந்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் 3 பேரும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஒருவரும் பலியாகியுள்ளனர். அதேபோல், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய மாவட்டங்களில் ஏராளமான ஆடு, மாடுகளும் பலியாகியுள்ளன.

Similar News

News September 18, 2025

BREAKING விஜய் கட்சிக்கு ஐகோர்ட் எச்சரிக்கை

image

தேர்தல் பரப்புரைக்கு பாரபட்சமின்றி அனுமதி வழங்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. அனுமதி விவகாரம் தொடர்பாக தவெக தொடர்ந்த வழக்கை விசாரித்த கோர்ட், சேதமடையும் பொது சொத்துகளுக்கு இழப்பீடு வசூலிக்கும் வகையில் விதிகளை வகுக்கவும் அரசுக்கு ஆணையிட்டுள்ளது. மேலும், கட்சியின் கூட்டத்தை கட்டுப்படுத்தும் கடமை அதன் தலைவருக்கே உள்ளதாகவும், அசம்பாவிதங்களுக்கு அவரே பொறுப்பேற்க வேண்டும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

News September 18, 2025

காணாமல்போன நகரங்கள்

image

பழங்காலத்தில் செழிப்பாக, வளர்ந்த நாகரீகம் கொண்ட சில நகரங்கள் அழிந்துபோனதாக வரலாறு கூறுகிறது. ஆனால், சில நகரங்கள் தற்போதும் இருப்பதாக வதந்திகளும், கட்டுக்கதைகளும் உள்ளன. காலத்தால் அழிந்துபோன நகரங்களின் போட்டோக்களை மேலே கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக பாருங்க. அதில் இல்லாமல் வேறு ஏதேனும் காணாமல்போன நகரம் உங்கள் தெரிந்தால் கமெண்ட்ல சொல்லுங்க.

News September 18, 2025

வாக்கு திருட்டு இப்படிதான் நடக்கிறது: ராகுல்

image

வாக்காளர் குறித்த அனைத்து தகவல்களும் ஒரே இடத்தில் இருப்பதால் தான் வாக்கு திருட்டு எளிதில் நடப்பதாக ராகுல் காந்தி பேசியுள்ளார். வாக்கு திருட்டை நடத்த, சாஃப்ட்வேர்களை வைத்து ஒவ்வொரு பூத்திலிருந்தும் முதல் வாக்காளரின் தரவு நீக்கப்படுகிறதாம். பின்னர், நீக்கப்பட்ட நபரின் தகவலை வைத்தே சிம் கார்டுகளை வாங்கி மற்ற தொகுதிகளில் வாக்காளராக சேர்ந்துகொள்ளும்படி விண்ணப்பிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!