News December 4, 2024
குளிக்க சோம்பேறித்தனமா? வந்தாச்சு Human Washing மெஷின்

யாருப்பா காலைல எந்திரிச்சி குளிக்கிறது என கஷ்டப்படுறீங்களா? உங்களுக்காகவே ஜப்பான்காரன் washing machineஐ கண்டுபிடித்து விட்டான். அந்நாட்டின் HowerHead நிறுவனம் சயின்ஸ் கோ. AI உதவியால் குளிக்க வைக்கும் கருவியை கண்டுபிடித்துள்ளது. நீங்க உள்ள போய் சேரில் உக்கார்ந்து போதும். 15 நிமிடத்தில் அதுவே உங்கள குளிப்பாட்டி வெளியே அனுப்பிடும். விரைவில் இது பல நாடுகளும் கிடைக்குமாம். யாரெல்லாம் வாங்க ரெடி?
Similar News
News January 18, 2026
மஞ்சள் வானமாய் சம்யுக்தா மேனன்

நடிகை சம்யுக்தா மேனன் தனது லேட்டஸ்ட் போட்டோஸை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். அதில, அவர் மஞ்சள் வானம் கொஞ்சம் மேகம் போன்று அழகாக இருக்கிறார். பேசும் கண்கள், பேசாத வார்த்தைகளால் தோற்கடிக்கிறது. கண்ணோடு பூக்கும் பல விண்மீன்கள் இமைக்க மறுக்கின்றன. பூங்காற்று வீசும் அவரது கூந்தலும் அழகு. இந்த போட்டோஸ் உங்களுக்கும் பிடிச்சிருந்தா ஒரு லைக் போடுங்க.
News January 18, 2026
T20 WC: ICC-க்கு ஐடியா கொடுத்த வங்கதேசம்

T20 WC போட்டிகளுக்கு இந்தியா வராது என்று வங்கதேசம் ICC-யிடம் தெரிவித்துள்ளது. தங்கள் போட்டிகளை இலங்கைக்கு மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தும் வங்கதேச கிரிக்கெட் வாரியம், ICC-க்கு ஓர் ஐடியாவை வழங்கியுள்ளது. அயர்லாந்துடன் குழுக்களை மாற்றிக்கொண்டு, தங்களது அனைத்து போட்டிகளையும் இலங்கையில் விளையாடலாம் என்று பரிந்துரைத்துள்ளது. மேலும், இந்தியாவுக்கு பயணம் செய்ய போவதில்லை என்பதில் உறுதியாக உள்ளது.
News January 18, 2026
4 ஆண்டுக்கு பக்கா பிளான் போட்ட டெல்லி

டெல்லி அரசு காற்று மாசுபாட்டை குறைக்க 4 ஆண்டுத் திட்டத்தை வெளியிட்டுள்ளது. இந்த திட்டத்தில், பொது போக்குவரத்து விரிவாக்கம், மின்சார வாகன ஊக்குவிப்பு, தூசி கட்டுப்பாடு, மரங்கள் நடுவது போன்றவற்றில் அதிக கவனம் செலுத்தப்பட உள்ளது. மாசு கட்டுப்பாட்டை “ஒரு நீண்டகாலப் போராட்டம்” என்று குறிப்பிட்ட முதலமைச்சர் ரேகா குப்தா, 4 ஆண்டுகளில் PM2.5 அளவைக் குறைப்பதே திட்டத்தின் நோக்கம் என்று தெரிவித்துள்ளார்.


