News December 4, 2024
தீராத நோய்களை தீர்க்கும் சித்தேஸ்வரர்

கிழவனையும் குமரனாக்கும் மருத்துவத்தை கண்ட திருமூலரின் மரபில் வந்த காலங்கி சித்தர் தவம் இருந்த திருத்தலமே சேலத்தை அடுத்த கஞ்சமலையாகும். அங்குள்ள இறைவன் பெயராலேயே சித்தேஸ்வரர் கோயில் என இத்தலம் போற்றப்படுகிறது. ஏராளமான மூலிகைகள் உள்ள இம்மலையில் கிரிவலம் வந்து, இறைவனை வணங்கி உப்பு-மிளகு வாங்கி போட்டு நேர்த்திக்கடன் நிறைவேற்றினால் தீராத நோய்களும் தீரும் என்பது நம்பிக்கை.
Similar News
News October 18, 2025
பணத்தை சேமிக்க சில எளிய விதிகள்!

நாம் எவ்வளவு சம்பளம் வாங்கினாலும், அதில் குறிப்பிட்ட தொகையை சேமிக்க தவறினால் நெருக்கடியான சூழ்நிலைகளில் மிகவும் சிரமப்படுவோம். வாங்குவதே 20K, 30K மட்டுமே.. இதில் எப்படி சேமிப்பது என கேட்காதீர்கள். உங்கள் எதிர்கால நலனுக்காக பணத்தை சேமிக்க சில எளிய விதிகள் இங்கு பகிரப்பட்டுள்ளன. அவற்றை தவறாமல் பின்பற்ற முயற்சிக்கவும். ஒவ்வொன்றாக SWIPE செய்து பார்க்கவும்..
News October 18, 2025
Bigg Boss நிகழ்ச்சியில் விஜய்யின் ஆதரவாளர்

பிக்பாஸ் தமிழ் சீசன் 9 தொடங்கிய நாளில் இருந்தே விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் சென்று கொண்டிருக்கிறது. இந்த சீசனில் பங்கேற்ற போட்டியாளர்களில் ஒருவர் தவெக ஆதரவாளர் என்பதுதான் தற்போதைய ஹாட் டாபிக். அவர் வேற யாரும் இல்ல. மீனவ பொன்னு சுபிக்ஷாதான். தூத்துக்குடி தவெக நிர்வாகி அஜிதா ஆக்னல் உடன் சுபி இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
News October 18, 2025
சற்றுமுன்: விஜய் முக்கிய உத்தரவு

கரூர் துயர சம்பவத்தையொட்டி தவெக சார்பில் தீபாவளி கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடத்த வேண்டாம் என நிர்வாகிகளுக்கு விஜய் உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து, மண்டல வாரியாக தவெக ஐ.டி. விங் சார்பில் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதில், கரூர் சம்பவத்தில் பிரிந்த நம் சொந்தங்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, கட்சி சார்பில் யாரும் தீபாவளி கொண்டாட வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.