News December 4, 2024
அரையிறுதிக்கு முன்னேறுமா இந்தியா?

U19 ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் கடைசி லீக் ஆட்டங்கள் இன்று நடைபெறுகிறது. இதில் பாக் – ஜப்பான், (2 புள்ளிகளுடன் சமநிலையில் இருக்கும்) இந்தியா – UAE அணிகள் மோதவுள்ளன. இந்த ஆட்டத்தில் இந்திய அணி வென்றால் அரையிறுதிக்கு தகுதி பெறும். தோல்வி கண்டால் தொடரில் இருந்து வெளியேறும். பாக்., அணி 2 ஆட்டங்களில் வெற்றி கண்டுள்ளதால், அந்த அணி ஏறக்குறைய அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துவிட்டது.
Similar News
News February 2, 2026
69 குழந்தைகளை பெற்றெடுத்த பெண்!

ஒரு பிரசவமே கடினமாகிவிட்ட நிலையில், இவரின் கதை ஒரு அதிசயமே! ரஷ்யாவை சேர்ந்த Feodor Vassilyev என்பவரின் மனைவி, Valentina Vassilyev 1725- 1765 ஆண்டுகளுக்கு இடையில், 27 பிரசவங்களில் 69 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். இதில் 16 இரட்டையர்கள்,7 triplets (ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள்), 4 quadruplets (ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள்) பிரசவங்களும் அடங்கும். அதிக குழந்தைகளை பெற்றெடுத்த கின்னஸ் சாதனை இவருடையதே!
News February 2, 2026
‘நாங்கள் சாகப் போகிறோம்’

தலைப்பை பார்த்ததும் பதற்றம் ஏற்படுகிறதா? கோவை பெரியநாயக்கன் பாளையத்தை சேர்ந்த மின்வாரிய அதிகாரி கமலேஷ், இப்படித்தான் தனது உறவினர்களிடம் வீடியோ மூலம் தெரிவித்துள்ளார். உறவினர்கள் உடனடியாக அவரது வீட்டிற்கு சென்றபோது, கமலேஷ், அவரது மனைவி இலக்கியா, மகள் ஏஞ்சல்(10) ஆகியோர் விஷம் அருந்தி உயிரற்ற உடல்களாக கிடந்துள்ளனர். மூவரின் உடல்களையும் கைப்பற்றி போலீஸ் விசாரித்து வருகிறது. தற்கொலை எதற்கும் தீர்வல்ல!
News February 2, 2026
அதிரடி திருப்பம்: கூட்டணி அமைத்த பாஜக- காங்கிரஸ்!

பரம எதிரிகளான காங்கிரஸ் & பாஜக கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளது. மகாராஷ்டிராவின் மாலேகான் மாநகராட்சியின் மேயர் & துணை மேயர் தேர்தலில், இஸ்லாம் கட்சிக்கு எதிராக இரு கட்சிகளும் கைகோர்த்துள்ளன. 84 உறுப்பினர்களை கொண்ட மாலேகான் முனிசிபல் கார்ப்பரேஷனில், எக்கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. கட்சி மேலிட உத்தரவின்றி கூட்டணி அமைப்பது குறித்து CM தேவேந்திர பட்னவிஸ் அதிருப்தி தெரிவித்துள்ளார்.


