News December 4, 2024

‘புஷ்பா 3’ குறித்த பதிவை நீக்கிய படக்குழு

image

அல்லு அர்ஜுன் நடிப்பில் ‘புஷ்பா-3’ வெளியாவதை ஆஸ்கர் விருது பெற்ற சவுண்ட் இன்ஜினியர் ரசூல் பூக்குட்டி மறைமுகமாக உறுதி செய்துள்ளார். ‘புஷ்பா 2: தி ரூல்ஸ்’ படத்தின் இசைப் பணிகள் முடிந்ததை குறிக்கும் வகையில் ஒரு புகைப்படத்தை படக்குழு வெளியிட்டது. அதில், ரசூல் உள்ளிட்டோர் நிற்க, பின்புற திரையில் ‘புஷ்பா 3: தி ராம்பேஜ்’ என எழுதப்பட்டிருந்தது. இப்பதிவு வைரலானதை அடுத்து படக்குழு உடனே அதை நீக்கியுள்ளது.

Similar News

News January 11, 2026

தவெகவின் சின்னம் அறிமுகம்.. விஜய்யின் பக்கா பிளான்!

image

பிரமாண்டமான மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் தவெகவின் சின்னத்தை அறிமுகம் செய்ய விஜய் திட்டமிட்டு வருகிறார். மோதிரம், விசில், வெற்றிக் கோப்பை உள்ளிட்டவற்றில் ஏதேனும் ஒன்றை தேர்தல் ஆணையம் தவெகவிற்கு ஒதுக்கி இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சேலம் (அ) தருமபுரியில் மக்கள் சந்திப்பை நடத்தி, சின்னத்தை விஜய் வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தவெகவிற்கு எந்த சின்னம் பொருத்தமாக இருக்கும்?

News January 11, 2026

போனில் அதிகமா விளம்பரம் வருதா? உடனடி தீர்வு!

image

சில ஆப்களை பயன்படுத்தும்போது அடிக்கடி விளம்பரங்கள் வருவதால் கடுப்பா இருக்கா? இதில் பாதிக்கு பாதி விளம்பரங்கள் இனி காட்டாத படி செய்யமுடியும். ➤Settings-க்கு சென்று Private DNS என தேடுங்கள் ➤அதில் Private DNS Provider Hostname-ஐ க்ளிக் செய்து அதில் ‘DNS.Adguard.com’ என Type செய்யுங்கள். இதை செய்தால் கூகுளில் வரும் விளம்பரங்கள், போனின் Wallpaper Section-ல் தோன்றும் விளம்பரங்கள் காட்டாது. SHARE.

News January 11, 2026

பொங்கல் பண்டிகை: ஆம்னி பஸ் கட்டணம் ₹4,200 ஆக உயர்வு!

image

பொங்கல் விடுமுறையையொட்டி, ஆம்னி பஸ்களின் திடீர் கட்டண உயர்வு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சென்னை – நெல்லை செல்ல வழக்கமாக ₹1,800 வரை வசூலிக்கப்படும் நிலையில், தற்போது ₹4,200 வரை கட்டணம் உயர்ந்துள்ளது. அதேபோல், சென்னை – கோவைக்கு (முன்பு ₹1,200) ₹3,000 வரையும், சென்னை – மதுரை செல்ல (முன்பு ₹1,200) ₹3,500 வரையும் கட்டணம் அதிகரித்துள்ளது. நீங்க எவ்வளவுக்கு டிக்கெட் புக் பண்ணீங்க?

error: Content is protected !!