News December 4, 2024
3,000 ஏக்கரில் நடவு செய்யப்பட்ட நெல் பயிர்கள் நாசம்

செங்கம் தாலுக்கா முழுவதும் கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நேரில் பார்வையிட்டனர். கொட்டாவூர் குப்பநத்தம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் யாரும் வரவில்லை. தாலுக்கா முழுவதும் 3,000 ஏக்கருக்கும் மேல் பாதிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் நேரடியாக ஆய்வு செய்து விவசாயிகளிடம் மனுக்களை பெற்று உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
Similar News
News October 22, 2025
தி.மலையில் பள்ளி கல்லூரிகள் இயங்கும்

தி.மலை இன்று பள்ளி கல்லூரிகள் இன்று வழக்கம் போல் இயங்கம், அண்டை மாவட்டங்களான கள்ளக்குறிச்சி, விழுப்புரத்தில் கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.திருவண்ணாமலை மாவட்டத்தில் விடுமுறை குறித்தான எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
News October 22, 2025
தி.மலை மக்களே மிஸ் பண்ணிடாதீங்க

தி.மலை மாவட்டத்தில் இன்று (அக்.22) ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்கள் நடைபெற உள்ளன அதன்படி, தி.மலை- வி.பி.ஆர்.சி கட்டிடம் தி.வளசை, தெள்ளார்- பச்சை அம்மன் திருமண மண்டபம் வெடால், அனக்காவூர்- எஸ்.எஸ். மஹால் கோவிலூர், தண்டராம்பட்டு- ஜெயராமன் திருமண மண்டபம் குங்கீழநாத்தம், கீழ்பென்னாத்தூர்- ஹீரா மஹால் வயலூர் குறைகேட்கும் முகாம்கள் நடைபெற உள்ளன.
News October 22, 2025
இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று (21.10.2025) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.