News December 4, 2024
நீலகிரியில் இன்று இரவு ரோந்து அலுவலர்கள் விவரம்

நீலகிரி மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். உதகை நகரம் மற்றும் ஊரக பகுதி, குன்னூர் நகரம் மற்றும் ஊரக பகுதி, கூடலூர்,பந்தலூர் நகரம் மற்றும் ஊரக பகுதியில் இரவு ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் மற்றும் அவசர தேவைக்கான தொலைபேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. மக்கள் தங்கள் அவசர உதவிக்கு உடனடியாக அழைக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 18, 2025
நீலகிரியில் வேலை வேண்டுமா? APPLY NOW

உதகை அரசுக் கலை கல்லூரியில் (20/12/25)-ம் தேதி மாநில ஊரக நகர்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதில் நூறுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொண்டு ஆட்களை தேர்வு செய்கின்றனர். இந்த முகாமில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் இங்கு <
செய்ய வேண்டும் என வேலைவாய்ப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் .
News December 18, 2025
நீலகிரி: இன்றே கடைசி நாள்

நீலகிரி மாவட்டத்தில் சமூக நீதிக்காக பாடுபட்டு மக்களின் வாழ்க்கை தரத்தினை மேம்படுத்தும் பணிகளை செய்தவர்கள் தமிழக அரசின் பெரியார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு தெரிவித்துள்ளார். இதனை மாவட்ட சிறுபான்மை அலுவலகத்தில் இன்று (18/12/25)-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்
News December 18, 2025
நீலகிரியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பரிசோதனை

நீலகிரி மாவட்டம் உதகையில், மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு சேமிப்பு கிடங்கில், வாக்குப்பதிவு இயந்திரங்களை பெங்களுர் பெல் நிறுவன பொறியாளர்கள் மூலம் நடைபெறும் முதல் நிலை சரிபார்ப்பு பணியை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டார். இதற்கு அரசு அலுவலர்களும் கலந்து கொண்டனர்.


