News December 3, 2024

கிரிக்கெட்டுக்கு Good Bye; வங்கிப் பணிக்கு YES

image

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறும் வீரர்கள் எல்லாருக்கும் பெரிய ஐபிஎல் வாய்ப்புகள் கிடைப்பதில்லை. ஆகவே, எப்போதும் பாதுகாப்புக்கு ஒரு வேலையை வைத்திருப்பார்கள். அப்படித்தான், அண்மையில் ஓய்வை அறிவித்த சித்தார்த் கவுல், எஸ்பிஐ பணிக்கு திரும்பியுள்ளதை தன் X பக்கத்தில் ‘office time’ என்று பதிவிட்டு தெரிவித்துள்ளார். கோலியுடன் இணைந்து U-19 உலகக் கோப்பையை வென்றவர் சித்தார்த் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News

News September 10, 2025

10 ஆண்டுகளுக்கான ஒரு இளைஞரின் மாஸ்டர் பிளான்

image

B.Tech., படித்துவரும் இளைஞர் ஒருவர், 2025 – 2035 வரை தான் என்ன செய்யப்போகிறேன் என்பதை Reddit தளத்தில் பகிர்ந்தது தற்போது வைரலாகிறது. இந்த 10 ஆண்டுகளில் தூக்கத்தில் சமரசம் கிடையாது, பணக்கார பெண்ணை திருமணம் செய்வது, ஜிம் பயிற்சி, ரியல் எஸ்டேட்டில் முதலீடு, விடாமுயற்சியுடன் உழைப்பது, எதையும் விரிவாக படிப்பது ஆகியவை உள்ளன. இவை சரியானவையா? இதில் நீங்கள் எதையாவது பின்பற்றுகிறீர்களா?

News September 10, 2025

ஐபோன் 16 சீரிஸ்களின் விலையை குறைத்த ஆப்பிள்

image

ஐபோன் 17 சீரிஸ்களை ஆப்பிள் நிறுவனம் நேற்று அறிமுகம் செய்த நிலையில், இந்தியாவில் ஐபோன் 16 சீரிஸ்களின் விலையை ₹10,000 குறைத்துள்ளது. முன்பு, ஐபோன் 16 மாடல் ₹79,000-க்கு விற்கப்பட்ட நிலையில், அது தற்போது ₹69,000 ஆக குறைந்துள்ளது. அதேபோல், 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஐபோன் 16+ மாடல் ₹79,900 (முன்பு ₹89,900) மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் ஐபோன் 16+ மாடல் ₹89,900 (முன்பு ₹99,900) விற்கப்படுகிறது.

News September 10, 2025

விஜயகாந்த் வீட்டில் துயரம்.. பிரேமலதா கண்ணீர் அஞ்சலி

image

விஜயகாந்தின் உடன் பிறந்த சகோதரி விஜயலெட்சுமி உடல்நலக் குறைவால் நேற்று காலமானார். அவரது உடலுக்கு மாலை அணிவித்து பிரேமலதா, விஜய பிரபாகரன் உள்ளிட்டோர் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். மேலும், அவரது உடலுக்கு முக்கிய அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்திய பிறகு, சொந்த ஊரான மதுரையில் இன்று மாலை இறுதிச் சடங்கு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!